பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் ஒழுங்குவிடும் முத்தலைவேலாகிய சூலத்தினையும், கூற்றத்தை நிகர்த்த குந்தாலிப்படையினையும், நறுமணமிகும் கொன்றை மாலையினையும் உடையவனான இறைவன் பாதுகாத்தருள, நீ, நிலவலயத்துப் பொலிவுமிகுந்த இந்த நாவலந் தீவகத்திடத்து, அண்டம் உருவிப்போய் நின்ற மாமேரு மலையினைப் போல, நின்று நிலைப்பாயாக! கொடி-ஒழுங்கு, நாவலந்தீவு, உலகவட்டத்தின் ஒரு கூறாதலால், உலகில், பூமலி நாவற் பொழிலகத்து என்றனர். / 38. கொடிநிலை மூவர்கொடியுள்ளு மொன்றொடு பொரீஇ மேவரு மன்னவன் கொடிபுகழ்ந்தன்று. அரி, அயன், அரன் என்னும் முப்பெருங் கடவுளரின் கொடிகளுள்ளும் ஒன்றோடு உவமித்துப் பலரும் பொருந்துதல் வரும் வேந்தனது கொடியைப் புகழ்ந்தது, கொடிநிலை ஆகும். 'கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. (புறத். சூ. 32) என்பதனையும் காண்க. "கொடி நிலை என்பது கீழ்த்திசைக் கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம் எனவும், எப்புறமும் நீடுசென்று எறித்தலின் அந் நீடல் நிலைமை பற்றிக் கொடியென்பாரும் உளர் எனவும், நச்சினார்க்கினியர் உரைப்பர். 'பொய்தீர் உலகம் எடுத்த கொடிமிசை, மையறு மண்டிலம்வேட்டனள் வையம்,புரவூக்கும் உள்ளத்தேன் என்னை இரவூக்கும், இன்னா இடும்பைசெய்தாள் (கலி. 141) என அவர் காட்டும் உதாரணத்தையும் கருதுக. - பூங்கண் நெடுமுடிப் பூவைப்பூ மேனியான் பாம்புண் பறவைக் கொடிபோல-ஓங்குக பல்யானை மன்னர் பணியப் பணிமலர்த்தார்க் கொல்யானை மன்னர் கொடி. 227 பலவான யானைகளை யுடைய பகை மன்னரும் வந்து அடிபணிய வீற்றிருக்கும், குளிர்ந்த மலரானே அமைந்ததாரினைச் சூடியோனாகிய, கொல்லும் களிற்றினையுடைய எம் மன்னனின் வெற்றிக் கொடியானது, பொலிவுடைய கண்களையும், நெடிய திருமுடியினையும், காயாம் பூப்போல விளங்கும் திருமேனியினையும் உடையானான திருமாலினது, பாம்பினை உண்ணும் பறவையான கருடன் விளங்கும் கொடியினைப் போல உயர்ச்சி பெறுவதாக!