பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்- 183 فنهای هلا மூவர் கொடியுள், திருமாலின் கொடியோடு ஒப்பிட்டது இது. பிறவும் வருமாற்றான் அறிக - . 39. கந்தழி குழு நேமியான் சோவெறிந்த வீழாச்சீர் விறன்மிகுத்தன்று. ● வளைந்த சக்கரப்படையினை உடையான், சோவென்னும் அரணினை எறிந்த, கெடாத தன்மையினையுடைய வெற்றியைச் சிறப்பித்தது. கந்தழி ஆகும். . 'கந்தழி என்பது ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்தபொருள் என்பது நச்சினார்க்கினியரது விளக்கம்-(புற. சூ. 33. உறை). கொடிநிலைக்கும் வள்ளிக்கும் பொதுவாய் நிற்பது இது எனவும் உரைப்பர். உழிஞைக்கண் வரும் கந்தழி என்பது, அரண் எறிந்த அரசனைத்திருமாலொடு சார்த்திக் கூறியது (வெண்பா. 101): இது கடவுள் வாழ்த்து வகையில் . அமைந்தது. . . மாயவன் மாயம் அதுவால் மணிநிரையுள் ஆயனா எண்ணல் அவனருளால்-காயக் கழலவிழக் கண்கலைக் கைவளையார் சோரச் - சுழலழலுள் வைகின்று சோ. 228 LDTu೧/T அருளாகிக் கோபிக்க, அவவளவிலே அசுரர் கட்டின வீரக்கழல்கள் நெகிழவும், விழிகள் அழலவும், கைகளில் வளையணிந்த மகளிர் மயங்கவும், சுழன்றெரியும் நெருப்பினுள்ளே தங்கினது சோ என்னும் அரண் மாயவனுடைய மாயம் அவ்வகையது; ஆதலால், அவனை மணிகளையுடைய ஆத்திரளினுள் அமைந்த இடையனாக எண்ணுதல் வேண்டா கந்தழிக்குநச்சினர்க்கினியர் காட்டும்மேற்கோட்செய்யுள் மிகவும் சுவையுடையது. அது, . 'சார்பினால் தோன்றாது தான்அருவாய் எப்பொருட்கும் சார்பென நின்று எஞ்ஞான்றும் இன்பந்தகைத்தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தான் அறிவிறந்த தூய்மையதாம் மைதீர் சுடர்' . . என்பதாம். . - - 40. வள்ளி - . பூண்முலையார் மனமுருக دم வேன்முருகற்கு வெறியாடின்று.