பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uါuf4 கேசிகன் பாடாண் படலம் 189 . 48. கடவுள்மாட்டு மானிடப்பெண்டிர் நயந்த பக்கம் முக்கணான் முயக்கம்வேட்ட - . . . . மக்கட்பெண்டிர் மலிவுரைத்தன்று. . . முக்கண்ணனாகிய பெருமானின் முயக்கத்தை விரும்பின மானிட மகளிரது கூறுபாட்டைச் சொல்லியது, கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் ஆகும். . . ஏனைக் கடவுளரை நயந்த மானிடப் பெண்டிர் தன்மை கூறுதலும், இத்துறையாகவே கொள்ளப்படும். - அரிகொண்ட கண்சிவப்ப அல்லினென் ஆகம் புரிகொண்ட நூல்வடுவாப் புல்லி-வரிவண்டு பண்ணலங்கூட்டுண்ணும் பனிமலர் பாசூரென் உண்ணலங் கூட்டுண்டான் ஊர். 237 . இரவுப் போதிலே, கனவிடத்தே, என் மார்பிடத்தே முறுக்குதலை உடைத்தான பூனூலது தழும்பு படுமாறு தழுவி, செவ்வரி உருவரி படர்ந்த என் கண்கள் சிவக்குமாறு என்னுடைய உள்ளழகைச் சிறிதும் ஒழியாமல் நுகர்ந்தவனுடைய ஊரானது, வரிகளையுடைய வண்டினம், பண்ணின் நலத்தைப் பாடியவாகத் திரண்டு நுகரும் குளிர்ந்த பூவினையுடைய திருப்பாசூர் என்பதே ஆகும். - . - பாசூர்-திருப்பாசூர் என்னுந் தலம். 49. குழவிக்கண் தோன்றிய காமப் பகுதி இளமைந்தர் நல் வேட்ட - : வள மங்கையர் வகையுரைத் தன்று. . . ... " குழவிப் பருவத்தராகிய மைந்தரது நலத்தினை விரும்பிய, காம்ப்பகுதி நிறைந்த மங்கையரது தன்மையைச் சொல்லியது, குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி ஆகும். 'குழவி மருங்கினும் கிழவதாகும் (புறத். சூ. 29) எனத் தொல்காப்பியர் உரைப்பதனையும், அதற்கு நச்சினார்க்கினியர் வகுத்துள்ள உரைப்பகுதியினையும் இவ்விடத்துக் கருதுக. . வரிப்பந்து கொண்டொளித்தாய்வாள்வேந்தன் மைந்தா அரிக்கண்ணி அஞ்சி யலற-எரிக்கதிர்வேற் . செங்கோலன் நுங்கோச்சினக்களிற்றின் மேல்வரினும் எங்கோலம் தீண்டல் இனி. . 238 வாள் வேந்தனின் மைந்தனே! அரிபரந்த கண்ணினளான இவள் அஞ்சி அலறும்படியாக, இவளுடைய அழகிய பந்தினை