பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் எடுத்துக் கொண்டு மறைந்தனை ஆகலான், நெருபபுப் போன்ற ஒளிவேலினையும் செவ்விய கோலினையும் உடைய நும்முடைய கோமான் சினக்களிற்றின் மேலாகக் கொண்டு தர வந்தனையானாலும், இனி எம் அணியினைத் தீண்டாதே கொள். நுங்கோ’ என்றது, தம் மகனுடன் ஊடிக் கூறுகின்றனள். ஆதலின், நுங்கோ, புதல்வனின் தகப்பனான அவள் காதலனைக் குறித்தது. 50. ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி நீங்காக் காதன் மைந்தரும் மகளிரும் பாங்குறக் கூடும் பதியுரைத்தன்று. நீங்காத காதலையுடைய ஆடவரும் மகளிரும், அழகு பொருந்தத் தம்முட் கூடுகின்ற பதியினைச் சொல்லியது, ஊரின் கண் தோன்றிய காமப்பகுதி ஆகும். . i ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப’ (புறத். சூ.30) என்பது தொல்காப்பியம். இது புரைதீர் காமத்திற் கன்றிப் பக்கநின்ற காமத்திற்கும் புறனடை கூறுகின்றது எனவும், பின்னுள்ளோர் ஏழு ப்ருவமாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்கின்ற உலாச் செய்யுள் இதுவெனவும் நச்சினார்க்கினியர் உரைக்கின்றனர். ஊடிய ஊடல் அகல உளம்நெகிழ்ந்து வாடிய மென்தோள் வளையொலிப்பக்-கூடியபின் யாமநீ டாகென்ன யாழ்மொழியார் கைதொழுஉம் ஏமநீர்க் கச்சியெம் ஊர். - 239 யாழிசையைப் போலும் இனிதான சொல்லினை உடைய மகளிர், தம் கணவரோடு ஊடியிருந்த ஊடல் அகன்றுபோக, நெஞ்ச்ம் நெகிழ்ந்து பிரிவாலே வாடின தம் மென்மையான தோளிடத்து வளைகள் ஒளிசெய்யத் தம் கணவருடனே கூடிய பின்னர், இரவுப் பொழுது நீடிப்பதாக எனச் சொல்லிக் கைகூப்பும், காவல் உடையதாயும் நீர்வளஞ் சிறந்ததாயும் இருக்கின்ற காஞ்சியே, எங்கள் பகுதியாகும். - ‘யாமம்’ இரவுப் பொழுதைப் பொதுப்படக் குறித்தது. . தொகுத்து உரைத்தல் * ஒருவேந்தனது புகழும் வலிமையும ஒம்பா ஈகையும் அளியும் என்னும் இவற்றை ஆராய்ந்து, அவனைப் புகழ்ந்து உரைத்தலாகிய இந்தப் பாடாண் படலம் நாற்பத்தெட்டுத் துறைகளை உடையதாம். அவை, - .