பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 192 - புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் . இன்னது செய்தல் நினக்குத் தகுதியாகும் என அறிவன் மன்னனுக்குச்சொல்லுதலாகிய ஒம்படையும் நீவழிபடுதெய்வம் நின்னைப் பாதுகாக்க, நின் குடியினர் வழிவழி சிறப்பதாக என வாழ்த்தும் புறநிலை வாழ்த்தும்; முக்கடவுளரின் கொடிகளுள் ஒன்றோடு உவமித்து மன்னனது கொடியைச் சிறப்பித்தலாகிய கொடிநிலையும்; திருமால் சோ அரணை அழித்த சீரினைப் போன்றது நினது சீரும் ஆகும் எனப் போற்றுதலான கந்தழியும்: மகளிர் மனமுருக வேல்முருகனுக்கு வெறியாடுதலான வள்ளியும் பரிசில் பெற்றானொரு புலவன் பெறச் செல்வான் ஒருவனைத் தலைவனிடம் ஆற்றுப்படுத்தலான புலவராற்றுப் படையும்; இன்னது அடைவோம்’ எனக் கடவுள் திருவடிகளைத் தொழுது போற்றலாகிய புகழ்ந்தனர் பரவலும்; உலக வின்பங்களுள் ஒற்றை வேட்டு இறையடி தொழுது போற்றுதலாகிய பழிச்சினர் பணிதலும்; தலைவனது - - மாலையினை ஒருத்தி விரும்புவதாகக் கூறிப் போற்றலாகிய கைக்கிளையும்; - தலைவனை நாடி நள்ளிருளில் வந்து கூடிச் செல்வாள் ஒருத்தியெனக் கூறுதலாகிய பெருந்திணையும்; ஒருத்தி தலைவனைத் தழுவேனென்று ஊடிநின்று கூறலாகிய புலவி பொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டும்; கடவுட் பெண்டிர் கடவுளை நயந்தது கூறுதலாகிய கடவுள்மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கமும் கடவுளிடத்து மானிடப் பெண்டிர் காமுற்றது கூறிப் பாடுதலாகிய கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கமும்; குழவிப் பருவத்தாரிடம் மகளிர் கொள்ளும் விருப்பினைக் கூறுதலாகிய குழவிக்கண் தோன்றிய காமப் பகுதியும்; காதலர் இன்னதோர் ஊரிற் கூடுவேம் என உரைத்தனர் எனக் கூறுதலான ஊரின்கண் தோன்றிய காமப்பகுதியும் என்பனவாம். - - ಛಿಛಿಛಿ ।