பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-வெட்சிப்படலம்ட 7 . . . அவற்றுள் மன்னுறு தொழில் வருமா9, முன்னர்ச் சொல்லிய இரண்டனுள்ளும் மன்னன் ஏவிய பொழுதே செய்யும் தொழில்கள் வருகின்ற முறைமையாவது மண்டு மெரியுண் மரந்தடிந்திட்டற்றாக் கொண்ட கொடுஞ்சிலையன் கோல்தெரியக்-கண்டே அடையார் முனையலற ஐயிலைவேற் காளை விடையாயங் கொள்கென்றான் வேந்து. - 1 கொடிய வில்லினைக் கைக்கொண்டவன் அம்புகளை ஆராய்தலைக் கண்டும், அரசனானவன், மிகக் கொழுந்துவிட்டு எரிய நின்ற நெருப்பினுள்ளே மரத்தை வெட்டி இட்டதொரு தன்மைத்தாக, வியக்கத்தக்க இலைத்தொழிலினாற் சிறந்த வேலினையுடைய காளையே! நம் பகைவரின் போர்முனை அலறும்படியாக நீ சென்று, ஏறுகளையுடைய அவரது ஆநிரைகளைக் கைப்பற்றிக் கொணர்க என்று ஏவினான். இது கண்டோர் கூற்று, கொண்ட கொடுஞ் சிலையன் கோல் தெரியக் கண்டே' என்றதனால், அவ் வீரன் பகைவரொடு போரியற்றுதற்கு முனைந்து நின்றனன் என்பதும், அவனது அந்த வெஞ்சினம் - மேலும் மிக்கெழுமாறு, அரசன்'விடையாயம்கொள்க’ என்றனன் என்பதும் விளங்கும். இதனையே, மண்டும் எரியுள் மரந்தடிந் திட்டற்றால் எனக் கூறினர். - - இனித் தன்னுறு தொழில் வருமாறு: இனி, அரசன் ஏவாதேயே செல்லுதலாகிய தன்னுறு தொழிலின் முறைமை வரும் வகையாவது, அறாஅ நிலைச்சாடி ஆடுறு தேறல் ~ மறாஅன் மழைத்தடங் கண்ணி-பொறாஅன் கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை - நெடுங்கடைய நேரார் நிரை. 2 குளிர்ந்த பெரிய கண்களையுடைய கள்விலையாட்டியே! கள்.நீங்காத நிலைத்தாழியில் இருக்கின்ற அடுதலுற்ற மதுத் தெளிவை இவனுக்கு வார்த்தற்கு நீயும் மறுக்காதே. தறுகண்மையினை உடையவன் இந்த மறவன். இவன் அதனைப் பொறுக்கமாட்டான். இவன், தன் காலிலே வீரக் கழலினைக் கட்டினான் என்றால், நாளைக் காலையில், பகைவருடைய ஆநிரைகள் முற்றவும், நின்னது நெடிய வாயிலிடத்தனவாக ஆகுமே! - - - - مہ •