பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்ட்பொதுவியற்படலம் 197 உன்ன மரமே கிட்டுதற்கரிய சேனையினையும் கட்டிய வீரக்கழலினையும் உடையான்நம் வேந்தன், இவனது வலியொடு மாறுபட்டு முன்னே வந்து வணங்காதிருக்கும் அவருடைய மாறுபாடு இனிக் கெடும்படியாக, அங்ங்னம் எதிர்த்துவந்த மன்னர்களும், இவன் வலியெல்லாம் தடுத்துத் தம் மாறுபாடு ஒழிந்தனர்; நீயும் நின் கொம்பெல்லாம் தளிர்க்கப் பொலிவாயாக 5. ஏழக நிலை-1 ஏழகம் ஊரினும் இன்னன் என்றவன் தாழ்வில் ஊக்கமொடு தகைபுகழ்ந்தன்று. எம் மன்னவன் ஆட்டுக்கடாயினை மேற்கொண்டு செலுத்துகின்றவன் எனினும், இத் தன்மையன் என்று அவனுடைய குற்றமில்லாத மனவெழுச்சியொடு கூடிய தகைமையைச் சொல்லியது. ஏழக நிலை ஆகும். ஏழகம்ஆட்டுக்கிடாய்; அதை ஏறிச்செலுத்தும் பருவம், மிக்க இளமைப் பருவம். - எம்மனை யாம்மகிழ ஏழகம் மேற்கொளினும் தம்மதில் தாழ்வீழ்த் திருக்குமே-தெம்முனையுள் மானொடு தோன்றி மறலுங்கால் ஏழகத் - தானொடு நேராம் அரசு. - - - 244 எம்.அரசன்,எம்முடைய மனையினிடத்தேயாம் மகிழுமாறு ஆட்டுக்கிடாயின் மேலேறிச் செலுத்துவான் ஆயினும், இவனுடைய ஆற்றலுக்கு அஞ்சிப் பகைவர்கள் தம் மதிற்கதவங் களைத் தாழ்வீழ்த்து இருப்பார்களே! பகைப் புலத்துக் குதிரை மேலானாகத் தோன்றி, இவன் போரைச் செய்யுங்காலத்து, கிடாயின் மேலானான இவனோடு, அப்பகைவர்கள் அனைவரும் ஒப்பாவாராம்! - - - இவனொருவனுக்கு அவர் அனைவரும் நேராகார் எனத் தம் மன்னனது ஆண்மைப் பெருக்கினைக் கூறினார். - 6. ஏழக நிலை-2 ஏந்துபுகழ் உலகின் இளமை நோக்கான் வேந்து நிற்றலும் ஏழக நிலையே. உயருகின்ற புகழினையுடைய உலகினிடத்தே, ஒருவன், தன் இளமையினைப் பாராதே, வேந்தியல் தொழிலினை மேற்கொண்டு நிற்றலும், ஏழக நிலையே ஆகும். - வேண்டார் பெரியர் விறல்வேலோன் தானிளையன் பூண்டான் பொழில்காவல் என்றுரையாம்-ஈண்டு