பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் மருளன்மின் கோள்கருது மால்வரையாளிக் . . குருளையும் கொல்களிற்றின் கோடு. 245 பகைவராவாரோ ஆண்டால் பெரியவர்கள்; வெற்றி வேலேந்திய நம் மன்னவன் மகனோ தான் மிகவும் இளையன்: ' இருப்பவும், இவன் பூமிகாவலை மேற்கொண்டான்' என்று சொல்லமாட்டோம். பெரிய மலையிடத்துக் கொள்ளுதலைக் கருதும் யாளியினது குட்டியும், கொலைத்தொழில் வல்ல களிற்றினது கொம்பினையே கொள்ளக்கருதும்; ஆதலால், இவ்விடத்துமருட்சி கொள்ளன்மின் “யாளிக்குட்டியும்கொல்களிற்றைவெல்லும் என்பதுபோல, இவனும் பகையை வெல்வான்” என்பது கருத்து. 7. கழனிலை அடுமுரண் அகற்றும் ஆளுகு ஞாட்பிற் கடுமுரண் வயவன் கழன்புனைந்தன்று. அடுதற்குக் காரணமான முரண்பாட்டினைப் பெருக்கும் மறவர்கள் படுதற்கிடமான போரிடத்துக் கடிய முரண்பாட்டினை உடையான் ஒருவீரன், கழலினைப் புனைந்தது, கழனிலை ஆகும். - - - வயவர் ஏத்திய ஓடாக் கழனிலை உளப்பட' என்பர் தொல்காப்பியர்.முன்பு கழல் காய்ந்த வீரர் மழலைப்பருவத்தான் ஒருவன் களத்திடை ஓடாது நின்றமை கண்டு, அவனைப் புகழ்ந்து அவனுக்குக்கட்டிய கழனிலைக் கூத்து இது . . வாளமரின் முன்விலக்கி வான்படர்வார் யார்கொலோ கேளலார் நீக்கிய கிண்கிணிக்காற்-காளை கலங்கழல் வாயிற் கடுத்தீற்றி யற்றால் - - பொலங்கழல் கான்மேற்புனைவு. . . . . . 246

  • i

தனக்கு உறவாயிராதாரைப் போக்கிய, கிண்கிணி விளங்கும் கால்களையுடைய காளை எம்வேந்தன், இவன் பொன்னாற்செய்த வீரக்கழலினைக் கான்மேற் புனையும் அது, மிக்க நெருப்பினது வாயிடத்தே நஞ்சினைத் தீற்றினாற்போன்ற தன்மையதாகும்; இனி, இவன் செய்யப்புகும் வாட்பொருள், இவனை எதிர்நின்று தடுத்து வானகம் செல்பவர்தாம் யார் தாமோ? - 8. கற்காண்டல் ஆனாவென்றி அமரில் வீழ்ந்தோற்குக் கானம் நீளிடைக் கற்கண்டன்று.