பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் பொலிந்த நல்ல மணியானது நன்றாக இசைக்கக், கல்லினைக் கைக்கொண்டனர். காற்றிவெளிப்படச் செய்து அதாவது வென்று. 10. கல்நீர்ப்படுத்தல்-1 வண்டுசூழ் தாமம் புடையே அலம்வரக் கண்டு கொண்ட கல்நீர்ப் படுத்தன்று. வண்டினம் மொய்க்கும் மாலையானது பக்கத்திலே அசைந்துவரக், கண்டு கைக்கொண்ட கல்லினை நீர்ப்படை செய்தது, கல்நீர்ப்படுத்தல் ஆகும். நீர்ப்படுத்துத் தூய்மை செய்தல் இது. காடு கனலக் கனலோன் சினஞ்சொரியக் கூடிய வெம்மை குளிர்கொள்ளப்-பாடி நயத்தக மண்ணி நறுவிரைகொண்டாட்டிக் கயத்தகத் துய்த்திட்டார் கல். 249 போரிற் பட்டானுக்குக் கைக்கொண்ட கல்லினை, மறவர் காடு அழலும்படியாகக் கதிரவன் சினத்தினைச் சொரிதலாலே பொருந்திய வெப்பம் மாறிக் குளிர்ச்சி கொள்ளும்படியாக, வாழ்த்தி, நன்மையுண்டாகச் சுத்திபண்ணி, நறுமணப் பொருள்களைக் கலந்து நன்னீராட்டிப், பின்னர், நீர்நிலையிடத்தே செலுத்தி அழுத்தினர். கயம்-குளம், நீர்நிலை. - - 11. கல்நீர்ப்படுத்தல்-2 ஓங்கியகல் உய்த்தொழுக்கல் - ஆங்கெண்ணினும் அத்துறையாகும். உயர்ந்த நடுகல்லினைச் செலுத்தி நிரைத்தலை அவ்விடத்தே எண்ணினாலும், அது, முன்பு சொன்ன கல்நீர்ப்படுத்தல் என்னும் துறையேயாகும். - - கணனார்ந்துவப்பக் கடுங்கண் மறவர் பிணனார்ந்து பேய்வழங்கு ஞாட்பின்-நிணனார் விழுக்கினால் வேய்ந்த விறல்வேலோர் கல்லை ஒழுக்கினார் ஒன்றொருவர் முன். 250 - பேய்கள் பிணத்தைத் தின்று திரியும் போர்க்களத்தே, நிணம் நிறையும் பகைவரது நெஞ்சின் தசையினாலே மூடின வெற்றி வேலினைக் கைக்கொண்ட மறவர்களுக்கு நடுவதற்குரித்தான