பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்ட்.பொதுவியற்படலம் 201 கல்லினைத் தமது திரள் நிறைந்து உவகை மேற்கொள்ளத் தறுகண்மையினரான மறவர்கள், ஒருவர் முன்பு ஒன்றாக முறையே நிரைத்தார்கள். - - - இறந்தோர் பீடும் பெயரும் எழுதிய கல்லினை மறவர்கள் நிரைத்து நின்று, ஒருவர்முன் ஒன்றாக நிறுத்தி, நடுதற்கு முறைப்படுத்தினர் என்பது இது. நீர்ப்படுத்தல், இங்கு நீர்மைப்படுத்தல் என்னும் பொருளது. 12. கல் நடுதல் அவன்பெயர்கல் மிசைப் பொறித்துக் கவின்பெறக் கல்நாட்டினது. கல்லின் மேலாக, இறந்துபட்ட வீரனின் பெயரைப் பொறித்து, அதனை அழகுபெற நாட்டியது, கல்நடுதல் ஆகும். கல்லினை நடுதலும், அக் கல்லின் கண் மறவனை நடுதலும் என இஃது இருவகையாகும் என்பர் நச்சினார்க்கினியர். மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப் பீலி அணிந்து பெயர்பொறித்து-வேலமருள் ஆண்டக நின்ற அமர்வெய்யோற் காகென்று காண்டக நாட்டினார் கல். 251 வேற்போரிடத்தே ஆண்மைத் தன்மை மிகுதிபெறும் படியாக நின்ற, போரினை விரும்பியோனுக்கு, இஃது உருவமாக' என்று சொல்லி, அவனைக் குறித்துக் கொணர்ந்த கல்லினை, மாலை அசையவும், மணியொலி எழவும், கள்ளினைத் தெளித்தும், மயிற்பீலியைச் சூட்டியும், அவன் பெயரினைப் பொறித்தும், காட்சிபொருந்த நாட்டினார்கள். 13. கன்முறை பழிச்சல் நிழலவிர் எழில்மணிப்பூண் கழல்வெய்யோன் கல்வாழ்த்தின்று. நிழல்விடும் எழிலுடைய மணிப்பூணினையும், வீரக் கழலினையும் உடையானான, போர் விருப்பத்தை உடைய வீரனுக்கு நாற்றிய கல்லினை வாழ்த்தியது, கன்முறை பழிச்சல் ஆகும். பழிச்சல்-வாழ்த்துதல் - கால் கொள்ளுங்கால் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்து வாழ்த்தலும் பின்னர் நடப்பட்ட கல்லினைத் தெய்வமாக வாழ்த்தலும் என இஃது இருவகை ஆகும்.