பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 2. சிறப்பிற் பொதுவியற்பால (பொதுவியற்பாலன போல எழுதிணைக்கும் பொதுவாகாது, சிலவற்றிற்கே பொதுவாக நிற்பன இவை. ஆதலின், இங்ங்னம் வேறுபிரித்துச் சொல்வாராயினர்) முதுபா லையே சுரநடை யேனைத் - தபுதார நிலையே தாபத நிலையே தலைப்பெய நிலையே பூசன் மயக்கே மாலை நிலையேல் மூதா னந்தம் ஆனந் தம்மே ஆனந்தப் பையுள் கையறு நிலையுளப் படப்பதினொன்றும் மையறு சிறப்பிற் பொதுவியற் பால. (11) முதுபாலை, சுரநடை, தபுதாரநிலை, தாபதநிலை, தலைப்பெயல்நிலை, பூசன்மயக்கு, மாலைநிலை, மூதானந்தம், ஆனந்தம், ஆனந்தப் பையுள், கையறுநிலை ஆகியன பதினொன்றும், குற்றமற்ற, சிறப்பிற் பொதுவியற் பாலன ஆகும். இத் துறைகள், தொல்காப்பியரால், காஞ்சித் திணைச் சூத்திரத்து உரைக்கப்படுவனவாம்-(தொல், புறத். சூ. 24) அவற்றையும் அவற்றுக்குரிய உரையாசிரியர்களின் விளக்கங்களையும் கற்றறிதல் பயனுடைத்து. * - 15. முதுபாலை காம்புயர் கடத்திடைக் கணவனை இழந்த பூங்கொடி மடந்தை புலம்புரைத் தன்று. . • மூங்கில் ஓங்கின காட்டினிடத்தே, தன் கொழுநனை இழந்தாளான பூங்கொடிபோன்ற மடந்தையது, தனிமையைச் சொல்லியது, முதுபாலை ஆகும். - இதனை, நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து,தனிமகள் புலம்பிய முதுபாலையும் என்பர் தொல்காப்பியர்-(புறத். சூ. 24). பாலை' என்பது, பிரிவு; இதுவோ பெரும் பிரிவு, அதனால் 'முதுபாலை ஆயிற்று. . . . . நீர்மலி கண்ணொடு நின்றேன் நிலையிரங்காய் தார்மலி மார்பன தகையகலம்-சூர்மகளே - வெள்ளில் விளைவுதிரும் வேயோங்கும் வெஞ்சுரத்துக் கொள்ளல்நீ கோடல் கொடிது. . . . 254 . பேய் மகளே! விளாவினது பழம் உதிருகின்றது. மூங்கில் ஓங்கினதுமான வெய்ய சுரத்திடத்தே, நீர்மிகும் கண்ணொடு தமியளாகி நின்ற என் நிலையினுக்கு இரங்காயோ? மாலைமிக்க