பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்_பொதுவியற்படலம் 205 மார்பினை உடையானான என் கணவனது அழகிய மார்பகத்தை, நீ கொள்ளுதலை ஒழிவாயாக அங்ங்னம் இரங்காயாய்க் கொள்ளுமது மிகவும் கொடுமையானது! சூர்மகள் கொள்ளல்.தனக்கு உணவாக,வெள்ளில் விளைவு விளாமரத்தது பயனான பழம். மனைவியது துயர நிலையொடு, நிலையாமையும் உணர்த்தப்பெற்றது. 16. சுரநடை மூதரில் நிவந்த முதுகழை ஆரிடைக் காதலி யிழந்த கணவனிலை உரைத்தன்று. முதிர்ந்த பிணக்கம் ஓங்கிய, முற்றின மூங்கிலையுடைத்தாய் நிறைந்த இடத்திலே, காதலியை இழந்த தலைவனின் நிலைமையைச் சொல்லியது, சுரநடை ஆகும். - சுரநெறியிலே நடந்து போகுங் காலத்து, இங்ங்ணம் இழக்க நேருதல் என்பதனால், இது சுரநடை ஆயிற்று. - உரவெரி வேய்ந்த உருப்பவிர் கானுள் வரவெதிரின் வைவேல்வாய் வீழ்வாய்-கரவினால் பேதையைப் பெண்ணியலைப் பெய்வளையை என்மார்பிற் கோதையைக் கொண்டொளித்த கூற்று. 255 களவினாலே, பேதைமை உடையாளைப், பெண்மைத் தன்மை கொண்டவளை, இட்ட வளையல்களை உடையவளை, என் மார்பிடத்து மாலைபோல விளங்கியவளைப், பற்றிக் கொண்டு ஒளித்திருக்கும் கூற்றமே உலாவும் நெருப்பு மூடின. வெப்பமிகுந்த இக் காட்டினுள்ளே, நீ எனக்கு எதிரிட்டு வருதலை ஏற்பாயானால், என் கூரிய வேலின் வாயிலே பட்டு வீழ்வாய்! காதலியை இழந்தவன், கூற்றத்தைச் சினந்து இப்படிக் கொதிக்கின்றான். பெண்ணின் சோகம் புலம்பலாக அமைந்ததையும், ஆணின் சோகம் கூற்றத்தின்பாற் கொண்ட கொடுஞ்சினமாக நிகழ்வதையும் கவனிக்க 17. தபுதார நிலை புனையிழை இழந்தபின்புலம்பொடு வைகி மனையகத் துறையும் மைந்தன்நிலை யுரைத்தன்று. அணிந்த அணிகலன்களை உடையாளான தன் காதலியை இழந்ததன் பின்னர், அந்தத் தனிமைத் துயரொடும் பொருந்தியவனாகத் தன் இல்லிடத்தே தங்காநின்ற ஆடவனது நிலையினைச் சொல்லியது, தபுதாரநிலை ஆகும்.