பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் நேரார் நிரை நாளைக் காலை நின் நெடுங்கடைய ஆகுமாதலின், மறாதே தேறல் வார்ப்பாயாக’ என்று கண்டோர்கள் விலையாட்டிக்குக் கூறினர். - 'தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென் றன்ன விருவகைத்தே வெட்சி என்பது பன்னிருபாட்டியல் சூத்திரம் (இ. வி. சூ. 602 மேற்.) ஆதலையும் இங்கு நினைக்க வேண்டும். தொல்காப்பியப் புறத்திணையியல் வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற்றாகும் வெட்சியென உரைத்து, நிரைகோடலையும் நிரை மீட்டலையும் வெட்சியுள் அடக்கிக் கூறும். இருவர்க்கும் கோடற்றொழில் உளதாதலின் அங்ங்ணம் உரைத்தனர். மீட்டல் கரந்தை எனத் தனித்திணையாகவே இந்நூலுட் கூறப்படுகின்றது. இதனை வெட்சிக் கரந்தை' என்றும் உரைப்பர். ஆதந்தன்று’ என்று மட்டுமே இந்நூலிற் கூறினர். ஆனால், தொல்காப்பியப் புறத்திணை இயலோ, களவின் ஆதந்து ஓம்பல் எனக் களவாற் கொள்ளப்படுதல் இது எனவும் உரைக்கின்றது. வெட்சித் திணையின் துறைகள் வெட்சித் திணையின் துறைகள் பத்தொன்பதாகும். அவை வெட்சியரவம் முதலாக, வெறியாட்டு இறுதியாக வருவன. 1. வெட்சி அரவம் கலவார் முனைமேற், செலவு அமர்ந்தன்று. வெட்சியரவமாவது, தம்மொடு பொருந்தாத பகைவரின் போர் முனையிடத்துப்போதலை விரும்பியது ஆகும். நெடிபடு கானத்து நீள்வேன் மறவர் அடிபடுத் தாரதர் செல்வான் - துடிபடுத்து வெட்சி மலைய விரவார் மணிநிரைக் கட்சியுட் காரி கலுழ்ம். 3 நெடிதான வேற்படையினைக் கைக்கொண்ட மறவர்கள், காலிலே செருப்பை இட்டவராகச் சிள்வீடு என்னும் வண்டானது ஒலிக்கின்ற காட்டிடத்தே, கடத்தற்கு அரியதாக விளங்கும் வழியினைக் கடந்து செல்லுதலின் பொருட்டாகத் துடியினைக் கொட்டப்பண்ணி, வெட்சிப் பூவினையும் சூடப், பகைவரது மணியாற் சிறப்புற்றுள்ள ஆநிரைகளுள்ள காட்டினிடத்தே,காரி என்னும் பறவையும் தீநிமித்தமாக அழுகுரலெடுத்து அரற்றும். நெடி-சிள்வீடு என்னும் வண்டு.அடிபடுத்தல்-செருப்பினைக் காலடியிற் சேர்த்தல், துடிதுடி என்னும் பறை, வெட்சி-வெட்சிப் பூ; வெட்சி மறவர் என்பதற்கான அடையாளப் பூ விரவார்.