பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் தாரமிழந்த நிலை, தபுதார நிலை எனப்பட்டது. காதலி இழந்த தபுதார நிலையும் என்பர் தொல்காப்பியர்-(புறத். சூ. 24). யாக்கையும் இன்பமும் ஒருங்கு நிலையின்மை என்பதனையும் உணர்த்திற்று இது. - . . . பைந்தொடி மேலுலகம் எய்தப் படருழந்த மைந்தன் குரிசில் மழைவள்ளல்-எந்தை தபுதாரத் தாழ்ந்த தனிநிலைமை கேளாச் செவிடாய் ஒழிகென் செவி. 256 பச்சென்ற வளையல்களை உடையாளாகிய தன் மனைவி மேலுலகத்தைப் பொருந்தினமையாலே, துன்புற்று வருந்திய - வலிமையாளனும், ജ്ഞഖഖജു, மழைபோல வழங்கும் வள்ளலும் ஆகிய என் தந்தை போல்வான், காதலியை இழந்து அழுந்தின தனிமைத் துன்பமுடைமையைக் கேளாதபடி, என்செவிகள், தாம் செவிடாய்ப் போவனவாக - இது, பரிசிலன் ஒருவன், வள்ளலது தபுதார நிலைகண்டு தன்னுள்ளம் நொந்து கூறியதாம் ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை, இன்னும் வாழ்வல் என்னிதன் பண்பே (புறம் 245) என வருவது, தலைவன் தானே வருந்துதலை உரைக்கும். - . . 18. தாபதநிலை குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக் கருந்தடங் கண்ணி கைம்மை கூறின்று. குருந்தம்பூ மலரும் கண்ணியினை உடையோனான தன் கொழுநன் இறந்தானாகக் கருமையும் அகற்சியுமுடைய கண்ணினளான அவன் மனைவி, கைம்மை நோன்பு எய்தியவாற்றைச் சொல்லியது, தாபத நிலை ஆகும். தாபத நிலையாவது, நோன்பு நிலை: தவம்புரிந்து ஒழுகிய நிலைமை என்பர்.இருவரும் ஒருயிரால் நிகழ்ந்தமையின், உயிரும் உடம்பும் இன்பமும் செல்வமும் ஒருங்கிழந்தாள் தலைவியே ஆகும் என நச்சினார்க்கினியர்,காதலன் இழந்ததாபதநிலையும் (புறத். சூ. 24) என்பதன் உரையுட் கூறுவதையும் கருதுக. கலந்தவனைக் கூற்றம் கரப்பக் கழியாது அலந்தினையும் அவ்வளைத் தோளி-உலந்தவன் தாரொடு பொங்கி நிலனசைஇத் தான்மிசையும் காரடகின் மேல்வைத்தாள் 6öö. 257 தன்னோடும் இரண்டறக் கலந்தவனான தன் கணவனைக் கூற்றமானது ஒளிப்பத், தானும் அவனுடனே அப்போதே