பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

qèusiè கேசிகன்_பொதுவியற் l-് 207 - இறந்துபடாதுநொந்துவருந்துவாளான, அழகிய தொடியணிந்த தோளினை உடையாள், தன்னைவிட்டு இறந்தவனின் மாலையொடு சினந்து, வெறு நிலத்தில் வதிந்து, தான் அருந்தும் , கரிய இலையுணவின்மேல் கைவைப்பான் ஆயினாள். . . . 'அடகின்மேல் கை வைத்தாள்' எனவே, அதனையும் - வேண்டா வெறுப்பொடு நோக்குவாளாயினள் என்பதாம். - பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப்பொழுது மறுத்து, இன்னா வைகல் உண்ணும், அல்லிப் படுஉம் புல்லாயினவே” என்னும் புறப்பாட்டு அடிகளும் இதனை விளக்கும்.(புறம்-248), 19. தலைப்பெயல் நிலை இன்கதிர் முறுவற் பாலகன் என்னும் தன்கடன் இறுத்ததாய் தபுநிலை உரைத்தன்று. . . இனிதான ஒளிவீசும் நகையினையுடைய புதல்வன் என்னும், தான் இறுக்கக் கடவதான கடனை இறுத்த தாய், தான், அதன்பின்னர் இறந்த முறைமையைச்சொல்லியது,தலைப்பெயல் இடம்படு ஞாலத்து இயல்போ கொடிதே - தடம்பெருங்கண் பாலகன் என்னும்-கடன்கழித்து முள்ளெயிற்றுப் பேதையாள் புக்காள் முரணவியா . . வள்ளெயிற்றுக் கூற்றத்தின் வாய். 258 முட்போலக் கூரிய பல்லினையுடையாள், மிகப் பெரிய - கண்ணினையுடையபிள்ளையென்று சொல்லும்,தான் உலகிற்குக் கொடுக்கக் கடவதனைக் கொடுத்துவிட்டு, மாறுபாடு கெடாது பெரிய பல்லினையுடைய கூற்றுவனது வாயிடத்துத், தானே சென்று புகுந்தாள்: அகன்ற பூமியினது தன்மையோ மிகவும் கொடிதேயாம்! - புதல்வனைப் பெற்றுக் கடன் தீர்ந்த பின்னர் இறந்த தன் கணவனுடன் தானும் சென்று சேர்தலை விரும்பித், தன்னை மாய்த்துக் கொண்ட கற்புடையாளின் செவ்வி கூறியது இது. அவள் கருவுற்றிருந்தபோது, கணவனை இழந்தாள் ஆதல் வேண்டும். இங்கு ஈன்று புறந்தருதலாகிய தன் கடன் தீர்ந்ததும் கூற்றுவாய்ப் பட்டாளது அந்தத் தகைமையே போற்றப்படுகின்றது. ஆனால், ஆய் பெருஞ்சிறப்பிற் சிறுவற் பெயரத் தாய் தப வருஉந் தலைபெயல் நிலை என வரும் (புறத். - சூ.24)தொல்காப்பிய விதிக்குப்,பொருகளத்துப்பொருதுமாயும் பெருஞ் சிறப்பில் தீர்ந்து, தன் மகன் புறங்கொடுத்துப் போந்தானாக, அதுகேட்டுத் தாய் சாக்காடு துணிந்து சென்று,