பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் யெல்லாம் மாலைக் காலத்தே நினைத்தவளாகத் தன் மனத்தை முடுக்கிக், காலைப் பொழுதிலே, மூளும் அழலைப் போன்ற வேலினை உடையவனான தன் கணவனுக்குத் துணையாகித், . தானும், கொழுந்துவிட்டு எரியும் நெருப்புப் பொருந்திய சுடுகாட்டகத்தே சென்று நின்றாள். , , கணவன் சொல்லிய சொல், நின்னைப் பிரியேன் என்பது. வேலோன் புணர்ப்பாகி நின்றாள்' என்றது, அவனுடலொடு கலந்து தானும் நெருப்பிற் குளித்தாள் என்பதாம். - . 23. மூதானந்தம்-1 கயலேர் கண்ணி கணவனொடு முடிய வியனெறிச்செல்வோர் வியந்துரைத்தன்று. கயலையொத்த கண்ணினை உடையாள், தன் கணவனொடு தானும் இறந்துபட அகன்ற வழியிடத்தே செல்வோர், அவளது கற்புச் செறிவினைக் கண்டு, வியந்து சொல்லியது, மூதானந்தம் ஆகும். - கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தம் (புறத். சூ. 24) என்பர் தொல்காப்பியர். முதுமை கூறினர் உழுவலன்பு பற்றி என்பதனால், அவர் பிறவி பலவாகத் தொடர்ந்துவரும் உழுவலன்பினர் என்பதனையும் அறிதல் வேண்டும். - - ஒருயிராக உணர்க உடன்கலந்தார்க்கு - ஈருயிரென்பர் இடைதெரியார்-போரில் விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கும் . . . 262 உடனே உலந்த துயிர். போரினிடத்தே நஞ்சினைத் தாங்கும் வேலினை உடையானாகிய தலைவனுக்கும், வெள்ளிய வளையினளான அவன் மனைவிக்கும் உயிர் ஒக்கவே பிரிந்தது; ஆகலான், ஒக்கமணந்த அவ்விருவருக்கும் ஓர் உயிர் என்பதாகவே அறிக; அவர்கட்கு இரண்டு உயிரென்று சொல்லுவோர், நடுநிலை காணத் தெரியாதார் ஆவர். - - அறியாதார். - நடு தெரியார்.சீர்தூக்கி உண்மையினை ஆராய்ந்து - 24. மூதானந்தம்-2 கொடியான் கூர்ங்கணை குளிப்பத்தன்தொழில் முடியான் அவிதலும் மூதானந்தம்.