பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! !

  • ыё கேசிகன் * பொதுவியம் படலம் 211

- கடுவினையாளன், தன்மேற் பகைவருடைய கூரிய அம்புகள் அழுந்துதலானே, தான் கருதிய வினையினை முடியாதானாகவே இறத்தலும், மூதானந்தம் ஆகும். முந்தத்தான் மாவொடு புக்கு முனையமருட் சிந்தத்தான் வந்தார் செருவிலக்கிக்-குந்தத்தாற் செல்கணை மாற்றிக் குருசில் சிறைநின்றான் கொல்கணைவாய் வீழ்தல் கொடிது. - - 263 o நம் தலைவனானவன், பலரினும் முந்தத் தான்குதிரையுடGET களம்புகுந்தான் முற்பட்டபோரினுள்,பகைவர்சிதறியோடும்படி . . . எதிர்த்து வந்தாரது போரினை விலக்கினான்; தன் கையிடத்துச் சவளப்படையினாலே, தன்மேல் வருகின்ற அம்புகளை நீக்கிக், கரையினைப்போலப் பகைப்படையைத் தடுத்தும் நின்றான்; அவன், பகைவர் விடுத்த கொல்லும் கணைவாய்ப்யூட்டு வீழ்தல் என்பது, கொடிதாகும். - - . . N - அத் தகையானும் மாய்ந்தானே' என் இரங்குவதனால், யாக்கையது நிலையாமையும் கூறினர். - 25. ஆனந்தம்-1 ஆடமைத் தோளி விரிச்சியும் சொகினமும் வேறுபட அஞ்சி விதுப்புற் றன்று. - அசையும் மூங்கிலைப்போன்ற தோளினை யுடையாள், நற்சொல்லும் நன்னிமித்தமும் மாறுபடுதலானே, அச்சமுற்று நடுக்கமுற்றது, ஆனந்தம் ஆகும். - விழுப்புண்பட்டிருந்த தன் கணவனைப் பேணி வருவாள்.தீ நிமித்தம் தோன்றக் கண்டு அஞ்சிநடுங்குவது இது. வேந்தார்ப்ப வெஞ்சமத்து வேலழுவந் தாங்கினான் சாந்தார் அகலத்துத் தாழ்வடுப்புண்-தாந்தணியா மன்னா சொகினம் மயங்கின வாய்ப்புளும் - என்னாங்கொல் பேதை இனி? 264 அரசர் ஆரவாரிக்க, வெய்ய போரிடத்தே வேற்காட்டினைத் தடுத்து நின்றான் இவன் இவனுடைய சந்தனம் நனைந்த மார்பிடத்தே, ஆழ்ந்த வாயினையுடைய புண்கள் தாம் - ஆறாவாயின, நிமித்தமும் பொருந்தாதனவாயின. நற்சொல்லும் - கலங்கியிருந்தன; இனி, இப்பேதையாள்தான் என்னாகுவளோ? '೨/೧/ சாவ, அவளும் உடன் சாவாள்' என்பது இரங்கியோரின் குறிப்பு. ஆனந்தம்' என்பது, சாக்காட்டைக் குறித்தது. -