பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

geslgië கேசிகன்-பொதுவியற் படலம் 215 சேர்ந்தோர் செயலற்றதும், இறந்தோன் புகழினைக் கூறி உலகத்5, உயிரது சுழற்சிக்கு இரங்கியதுமான கையறு நிலையும் என்பனவாம். - - 3. காஞ்சிப் பொதுவியற்பால - - (காஞ்சி என்பது வீடுபேறு நிமித்தமாகப், பல்வேறு நிலையாமையைச் சான்றோர் சாற்றும் குறிப்பினது. இந்த வகையிற், பொதுவியற் பாங்குடன் நிகழ்வன இப்பகுதியுள் கூறப்பெறுகின்றன) - - மூதுரை பொருந்தியமுதுமொழிக் காஞ்சி பெருங்காஞ்சிய்யே பொருண்மொழிக் காஞ்சி புலவர் ஏத்தும் புத்தேள் நாட்டொடு முதுகாஞ்சிய்யொடு காடுவாழ்த் துளப்பட மையறு சீர்த்தி வருமிரு மூன்றும் - பொய்தீர் காஞ்சிப் பொதுவியற் பால. (12) முதுமொழிக் காஞ்சி; பெருங்காஞ்சி; பொருண்மொழிக் காஞ்சி; புலவரேத்தும் புத்தேள்நாடு; முதுகாஞ்சி, காடு வாழ்த்து என்பன ஆறும், காஞ்சிப் பொதுவியற் பாலன ஆகும். - 30. முதுமொழிக் காஞ்சி பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும் உலகியல் பொருள்முடி புணரக் கூறின்று. - - உலகோர் பலரும் புகழுகின்ற அறிவுடையோர்கள் குற்றம் நீக்கி ஆராய்கின்ற உலகியலுள், முடிந்த பொருளாகிய அறம் பொருள் இன்பத்தை, அனைவரும் அறியக் கூறியது, முதுமொழிக் காஞ்சி ஆகும். . - ஆற்றின் உணரின் அருளறமாம் ஆற்றார்க்குப் போற்றார் வழங்கின் பொருள்பொருளாம்-மாற்றிப் புகலா தொழுகும் புரிவளையார் மென்தோள் அகலா தளித்தொழுகல் அன்பு. . . . நெறியோடு ஆராய்ந்து உணருமிடத்துப், பல்லுயிர்க ளிடத்தும் அருளுடைமையே அறம் எனப்படுவதாகும்; வறியார் களுக்குத், தமக்கெனப் போற்றி வையாதவராகப் பொருளினை வழங்கின், அதுவே பொருளுட்ைமை ஆகும்; கொண்டதோர் 269 அன்பினை மாற்றிப் பிறனொருவன்பால் விருப்பங் கொள்ளாது நடக்கின்ற, முறுக்குவளையினை உடைய மகளிரின் மென்மையான தோளினை, நீங்காதே தண்ணளி செய்து கூடி ஒழுகுதலே காதல் ஆகும். - -