பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

లోuట&తీత__LIBతu__21 நெஞ்சமே! உண்டாய பெருமையினையும், விளங்கும் சடாமுடியினையும் உடையோரான முனிவர்கள், தெரிந்து அறிந்த பரந்த மெய்ந்நெறியின் மேலே சென்று அடங்கித், தீதான மன மயக்கத்தொடு தங்காது, அகன்ற பூமியிடத்தே அருளொடு கூடினாயாக இருந்து, பிறவித் துயரினின்றும் நீங்குவாயாக! 33. புலவரேத்தும் புத்தேள் நாடு துழைபுலம் படர்ந்த நோயறு காட்சி - விழைபுலம் கடந்தோர் வீடுரைத் தன்று. - நுண்ணிதான அறிவு சென்ற குற்றமற்றமெய்க்காட்சியினை உடையவராய், விருப்பத்திற்குக் காரணமான ஐம்புலங்களையும் வெற்றி கொண்டோர், சேர விரும்பும் வீட்டினது தன்மையைச் சொல்லியது, புலவரேத்தும் புத்தேள் நாடு ஆகும். - பகலும் இரவுமில்லை; பாசமுமில்லை; உணவும் இல்லை; மாறுபாடும் இல்லை; தாழ்வுமில்லை; இப்படி விளங்குவதே வீட்டுலகம் என்பது ஆன்றோர் கருத்தாகும். இதனை விளக்கியுரைப்பது இந்தத் துறை. பொய்யில் புலவர் புரிந்துறையும் மேலுலகம் ஐயமொன்றின்றி அறிந்துரைப்பின்-வெய்ய பகலின் றிரவின்று பற்றின்று துற்றின்று - இகலின்றிளிவரவும் இன்று. .. 272 - பொய்ம்மையற்ற - மெய்யறிவினர்கள் விரும்பி உறைதற்கிடமான மேலுலகம் எப்படிப்பட்டதென்பதை, ஐயப்பாடு ஒன்றேனும் இல்லாதே உணர்ந்து சொல்வதானால், அங்கே வெய்ய பகலும் இல்லை. இரவும் இல்லை; பற்றும் இல்லை என்க. இவற்றானே இவ்வுலகிடத்து உழலும் நாம், இவையில்லாத மேலுலகத்தை நாடுதல் சிறப்புடைத்து என்பது கருத்து துற்று என்றது வினை நுகர்ச்சியை. - . 34. முது காஞ்சி தலைவரும் பொருளைத் தக்காங் குணர்த்தி நிலைநிலையாமை நெறிப்பட உரைத்தன்று. - • , எவற்றுக்கும் மேலாக வருகின்ற மெய்ப்பொருளினது வகைமையைத் தக்கபடி அறிவித்து, ஏனையவற்றது நிலை. நில்லாமையினை முறைப்படச் சொல்லியது, முதுகாஞ்சி ஆகும்.