பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக்கேசின்_பொதுவியற்படலம் 219 தொகுத்து உரைத்தல் காஞ்சிப் பொதுவியற்பால என்னும் இப்பகுதி ஆறு துறைகளை உடையது. அவை: - அறம் பொருள் இன்பம் உணர்த்துவதான முதுமொழிக் - காஞ்சியும் நிலையாமை நிலை உரைத்தலாகிய பெருங்காஞ்சியும்; பொருளியல்பு கூறலாகிய பொருண் மொழிக் காஞ்சியும்: - புத்தேளுலகின் தன்மை கூறலாகிய புலவரேத்தும் புத்தேள் நாடும்; நிலையுள்ளனவும் நிலையற்றனவும் உணர்த்துதலாகிய முதுகாஞ்சியும் பலர் செலத் தான் செல்லாத சுடுகாட்டை வாழ்த்துதலாகிய காடு வாழ்த்தும் ஆம் 4. முல்லைப் பொதுவியற்பால - - (பொதுவியலுள் முல்லைப்பொதுவியற் பாலபற்றிக்கூறுவது இந்தப்பகுதியாம்.இவை பெரும்பாலும்,வாகைத்திணையின் சார்பு உடையன. இயல்புமிகுதி கூறுதல் முல்லை என்று முன்னரே விளக்கப்பட்டது. அதனை மனத்துட்கொண்டே இப்பகுதியினைக் கற்றறிதல் வேண்டும். அகப்பொருளில் வரும் முல்லை, இருத்தலும் இருத்தல் நிமித்தமும் கூறுவது; இது இயல்புமிகுதி உரைப்பது.இந்த வேறுபாட்டையும் உணர்தல் வேண்டும்) - - சீர்சால் முல்லையொடு கார்முல்லை என்றா தேர்முல்லையொடு நாள்முல்லை என்றா இல்லாள் முல்லையொடு பகட்டுமுல்லை என்றா பால்முல்லையொடுகற்புமுல்லை என்றாங்கு - இருநான் முல்லையும் பொதுவியற் பால. (13) - - முல்லை; கார் முல்லை; தேர்முல்லை; நாள் முல்லை; - o இல்லாள் முல்லை, பகட்டு முல்லை; பால் முல்லை; கற்பு முல்லை என்பன எட்டும் பொதுவியற்பாலன ஆகும். அவற்றுள் 36. முல்லை தடவரை மார்பன் தன்னமர் காதல் - மடவரற் புணர்ந்த மகிழ்ச்சிநிலை உரைத்தன்று. பெரியமலையினைப்போன்ற மார்பினை உடைய தலைவன், தன்னை மேவின அன்பினையுடைய, மடப்பத்தினைக் கொண்ட தன் தலைவியைக் கூடிய மகிழ்ச்சியது மிகுதியைச் சொல்லியது, முல்லை ஆகும். . . . . . . . .