பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் எடுத்துக் கொண்டுவா என்றனள் எனவும் உரைப்பர். எனினும், நிரைகோடற்குச் செல்பவர்க்கு ஆக் கொண்டுவா’ என்னும் சொல்லே நற்சொல்லாக அமைவது பொருத்தமாகும். . . 3. செலவு வில்லேர் உழவர் வேற்றுப் புலமுன்னிக் கல்லேர் கானங் கடந்துசென்றன்று. செலவாவது, வில்லாகிய ஏரினையுடைய உழவராகிய வெட்சி மறவர்கள், மாற்றாரது இடத்தினைக் கருதியவராகக், கற்கள் பொருந்தின காட்டைக் கடந்து, பகைவர் அறியாதபடி சென்றது ஆகும். - கூற்றினத் தன்னார் கொடுவில் இடனேந்திப் பாற்றினம் பின்படரமுன்படர்ந்து-ஏற்றினம் நின்ற நிலைகருதி ஏகினார் நீள்கழைய . குன்றம் கொடுவில்லவர். . . . 5 கூற்றினது கூட்டத்தைப் போன்று திரண்டிருந்த வெட்சி மறவர்கள், வளைந்த வில்லினை இடப்பக்கத்திற் கொண்டவராகக் கழுகும் பருந்தும் ஆகியவை பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கத், தமது வலியானே, வளைந்த வில்லினை உடையவரான பகைவரது ஏறுகளையுடைய ஆணினம் நின்ற இடத்தினைக் கருதியவராக, நீண்ட மூங்கில்களையுடைய குன்றத்தினைத் தம் நினைவிற்கொண்டு சென்றனர். . அவர் கூற்றினத்து அன்னாராக, அவராற் பகைவர்கள் தவறாது மடிவர் என்பது கருதிப், பாற்றினம் பின்படர்தலைச் செய்தன என்க. இது அவருடைய போர்மறத்தை வியந்து கூறியதாம். இப்படிச் செல்லும் அவர், பகைவருடைய காவன் மறவர்கள் அறியாதேயே செல்வர் என்பது, அடுத்து வருகின் வேய்' என்னும் துறையினால் புலனாகும். . 4. வேய் - - பற்றார் தம்முனைப் படுமணி யாயத்து ஒற்றா ராய்ந்த வகையுரைத் தன்று. வேய் என்பது,பகைவருடைய இடத்தே சென்று, ஒற்றர்கள், அப்பகைவருடைய ஒலிக்கும் மணிகள் பூட்டிய ஆநிரைகள் நின்ற இடத்தே, ஒற்றினை ஆராய்ந்து தெரிந்து வந்த கூறுபாட்டினைக் கூறுவது ஆகும். . . . . . . - ஒற்றிவருதல் பகைவருடைய காவன் மறவர்களின் வலிமையினை அறிந்து, அவரை வென்று நிரைகளைக்