பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 11. கைக்கிளைப் படலம் (கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம் ஆகும். அது, ஒருவர் மாட்டுக் காமவிருப்பு எழப், பிறிதொருவர் மாட்டு எழாதேயிருக்கின்ற ஒரு நிலைமை.இதனை அகத்திணை இயலுள் கொள்வர் தொல்காப்பியர். இது, ஆண்பாற் கூற்று எனவும், பெண்பாற் கூற்று எனவும், இருவகையுள் அடங்கும்) காட்சி ஐயம் துணிவே உட்கோள் பயந்தோர்ப் பழிச்சல் நலம்பாராட்டல் நயப்புற்றிரங்கல் புணரா இரக்கம் வெளிப்பட இரத்தல் எனவிவ் வொன்பதும் . ஆண்பாற் கூற்றுக் கைக்கிளையாகும். (14) ஆண்பாற் கூற்றுக் கைக்கிளை, காட்சி, ஐயம்: துணிவு: உட்கோள்; பயந்தோர்ப் பழிச்சல், நலம் பாராட்டல், நயப்புற் றிரங்கல்; புணரா இரக்கம் வெளிப்படஇரத்தல் என்னும் ஒன்பது துறைகளான் நிகழும். 1. காட்சி கரும்பிவர்பூம்பொழிற் சுடர்வேற் காளை கருந்தடங் கண்ணியைக் கண்டுநயந்தன்று. வண்டு பறக்கும் பூம்பொழிலினிடத்தே, ஒளி சுடருகின்ற வேலினை உடையானான தலைவன், கரிய பெரிய விழியினை - உடையாள் ஒருத்தியைக் கண்டு, அவளை அடைதலை விரும்பியது, காட்சி ஆகும். . - . . . . (மருட்பா) கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா அரும்பிவர் மென்முலை தொத்தாப்-பெரும்பணைத்தோட் பெண்டகைப் பொலிந்த பூங்கொடி கண்டேங் காண்டலும் களித்தவெங் கண்ணே. 285 கரிய பெரிய தன் கண்களே வண்டுகளாகவும், தன் செவ்விய வாயே தளிராகவும், அரும்பைப் போன்ற மெல்லிய முலைகளே பூங்கொத்தாகவும், பெரிய மூங்கில் போன்ற தோளாலும்,