பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c Helgië Gsälzeit * cosëélaostů u-aib . 227 பெண்மைத் தன்மையாலும் அழகுபெற்ற, மலர்க்கொடி ஒன்றினை யாம் கண்டேம் காண்டலும், எம் கண்கள் களித்தன. இது பொழிலிடைக் காரிகை ஒருத்தியைக் கண்டானொரு தலைவன், காமுற்றதனைக் கூறுவது. 2. ஐயம் கன்னவில் தோளான் கண்டபின் அவளை இன்னளென்றுணரான் ஐயமுற் றன்று. உலக்கல் சீலிக்கப்பட்ட தோளினை உடையானான தலைவன், அங்ங்னம் ஒருத்தியைக் கண்டதன் பின்னர், அவள் இன்ன தன்மையள் என்று உணராதவனாக ஐயமுற்றது, ஐயம் ஆகும். 'கன்னவில்’ என்பதற்குக், 'கல்லினை யொத்த திண்மை வாய்ந்த' எனினும் ஆம் தாமரைமேல் வைகிய தையல்கொல் தாழ்தளிரின் காமருவும் வானோர்கள் காதலிகொல்-தேமொழி மையமர் உண்கண் மடந்தைகண் ஐய மொழியாதாழுமென் நெஞ்சே 286 இனிதான பேச்சினையும் மையுண்ணும் கண்களையும் உடைய இந்த மடவாளிடத்தே, என்னுடைய நெஞ்சம் ஐயப்பாட்டின் நீங்காதாய்த் துயரத்தில் அழுந்துகின்றதே இவள், தாமரை மலரிடத்தே தங்கின திருமகள் தானோ? தாழும் தளிரினையுடைய பொழிலிடத்தே பொருந்திய வானோர்களது காதன்மிக்க ஒரு தெய்வமகளோ? இவள்தான் யாரோ? 'காதலி' என்றது, காதன்மிக்க மகளை. 3. துணிவு மாநிலத்தியலு மாத ராமெனத் தூமலர்க் கோதையைத் துணிந்துரைத் தன்று. தூய மலர்களால் ஆகிய மாலையினை உடையவளான தலைவியைப், பெரிய பூமியிடத்தாக நடக்கும் மானிடமகளே எனத் துணிந்து, அதனைச் சொல்லியது, துணிவு ஆகும். துணிதல்-தெளிதல். . . திருநுதல் வேரரும்பும் தேங்கோதை வாடும் இருநிலம் சேவடியும் தோயும்-அரிபரந்த போகிதழ் உண்கணும் இமைக்கும் - ஆகும் மற்றிவள் அகலிடத் தணங்கே. 287