பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக் கேசிகன் கைக்கிளைப் படலம் 233 உடையாள், தனது ஆசைப்பாட்டைச் சொல்லியது, நயத்தல் ஆகும். கன்னவில் தோளானைக் காண்டலும் கார்க்குவளை அன்னவென் கண்ணுக் கமுதமாம் - என்னை மலைமலிந் தன்ன மார்பம் - முலைமலிந்துழுழ் முயங்கங் காலே. 295 மலையையொத்த தோளானைக் கண்டேனாகக், கருங்குவளை மலரினையொத்த என்னுடைய கண்களுக்கு அதுவே அமுதமாக இருந்தது; மலை பரந்தாற் போன்ற அவனது மார்பகத்தினை, என் முலைகள் விம்மியவையாய் முறை முறையாகத் தழுவுமிடத்து, அந்த இன்பம் எங்ங்னே இருக்குமோ? - தழுவலை நயந்து இறங்கியது இது ஊழ்-முறை 12. உட்கோள் - வண்டமர் குஞ்சி மைந்தனை நயந்த ஒண்டொடி அரிவை உட்கொண் டன்று. வண்டினம் மேவும் மயிரினையுடைய தலைவனைத் தழுவுதலை விரும்பிய, ஒள்ளிய வளையினையுடைய தலைவியானவள், அந்த நினைவினைத் தன்னுட் கொண்டு. வருந்தியது, உட்கோள் ஆகும். உள்ளம் உருக ஒளிவளையும் கைநில்லா கள்ளவிழ் தாரானும் கைக்கணையான்-எள்ளிச் சிறுபுன் மாலை தலைவரின் உறுதுயர் அவலத் துயலோ அரிதே. 296 - நெஞ்சமானது உருகுதலானே ஒள்ளிய வளைகளும் கையிடத்து நில்லாவாயின, தேன் ஒழுகப்பட்ட தாரினை உடையானாகிய அவனும் என் கைகளுக்கு அகப்படான் ஆயினன்; என்னை இகழ்ந்து, சிறுமையிடைத்தாய்ப் புற்கென்ற மாலைக்காலமும் மேல்வந்ததாயின், அப்பொழுது, மிகாநின்ற துன்பமாகிய இழுக்கினின்றும் யான் தப்பிப் பிழைத்தல், மிகவும் அருமையுடையதாகும். " . - எனவே, எங்ங்னமும் அவனைக் கூடுதல் வேண்டும் எனக் கருதினள் என்க. . 13. மெலிதல் J. ஒன்றார் கூறும் உறுபழி நாணி மென்றோள் அரிவை மெலிவொடு வைகின்று. பொருந்தாதார் கூறுகின்ற மிக்க பழிச்சொல்லுக்கு நாணியவளாக, மெத்தென்ற தோளினையுடைய தலைவியானவள், நாணமுற்று, வாட்டத்துடனே தங்கியது, மெலிதல் ஆகும்.