பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 புறப்பொருள் @ລາຄາມrural மூலமும் உரையும் குரும்பை வரிமுலைமேற்கோல நெடுங்கண் அரும்பிய வெண்முத்துகுப்பக்-கரும்புடைத்தோட் காதல்செய் காமங் கனற்ற ஏதி லாளற் கிழந்தனென் எழிலே. 297 அழகிய நெடிய கண்கள், தம்மிடத்தே அரும்பிய வெண்முத்தான கண்ணிரைக், குரும்பைபோன்ற அழகிய முலைகளின் மேலாகச் சிந்தக் காமனது கரும்பெழுதிய தோளினைத் தழுவுதல் வேண்டுமென்னும் ஆசையினைச் செய்தலான காமமானது வெதுப்ப, யான், நமக்கு அருளாத அயலான் ஒருவனின் பொருட்டாக, என் அழகினை இழந்தேனே! வரி-அழகு கோலம்-அழகு. காதல் செய் காமம்-காதலைத் தோன்றச் செய்கின்ற காமம். கனற்ற-வெதுப்ப. 14. மெலிவொடு வைகல் மணிவளைநெகிழ மாநலம் தொலைய அணியிழை மெலிவி னாற்றல் கூறின்று. மாணிக்க வளையல்கள் கழலவும், பெரிதான அழகெல்லாம் கெடவும், அழகிய ஆபரணங்களை உடையவள், தனது மெலிவினது வலிமையைச் சொல்லியது, மெலிவொடு வைகல் ஆகும். பிறைபுரை வாணுதல் பீரரும்ப மென்றோள் இறைபுனை எல்வளையேக-நிறைபுணையா யாம நெடுங்கடல் நீந்துவேன் காமவொள்ளெரி கனன்றகஞ் சுடுமே. 298 இளம் பிறையினைப் போன்ற ஒளியுடைய நெற்றி பீர்க்கம் பூப்போலப் பசலை பூக்கவும், மெத்தென்ற தோளின் t முன்கையிடத்தாகச் செறித்த ஒளிவளைகள் கழன்று ஒடவும், இவ் யாமமாகிய பெரிய கடலினை, யான், என் நிறையே புணையாகக் கொண்டு நீந்தாநிற்பேன்; ஆயினும், காமமென்னும் ஒள்ளிய அழலானது கனன்று, என் உள்ளத்தை எரித்துக் கொண்டும் இருக்குமே! - - யாம நெடுங்கடலை நிறைபுணையா நீந்துவேன், என்னைக் காம வொள்ளெரி கனன்று அகஞ் சுடும் என்றனள். 15. காண்டல் வலித்தல் மைவரை நாடனை மடந்தை பின்னரும் கைவளை சோரக் காண்டல் வலித்தன்று.