பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

чjвё கேசிகன் * கைக்கிளைப் படலம் 235 மேகத்தைப் பொருந்தின மலைநாடனை, மடவாள், அதன் பின்னரும், தன் கைவளைகள் நெகிழ்தலானே, காணுதற்கு உறுதிகொண்டது, காண்டல் வலித்தல் ஆகும். வேட்டவை எய்தி விழைவொழிதல் பொய்போலும் மீட்டும் மிடைமணிப் பூணானைக்-காட்டென்று மாமை பொன்னிறம் பசப்பத் - தூமலர் நெடுங்கண் துயில்துறந்தனவே. 299 செறிந்த மணியாற் சிறந்த ஆபரணத்தை உடையவனைக் காட்டுக’ என்று சொல்லி, எனது மாமை நிறமானது பொன்னிறமாகப் பசலை பாயாநிற்பத், தூய குவளைமலர் போன்ற என் நெடுங்கண்களும், தாம் துயிலினைக் கைவிட்டனவாயின; ஆகலான், விரும்பினவற்றை அடைந்து ஆசைப்பாடு நீங்குவதென்பதும், இவ்வுலகிடத்தே பொய்தான் போலும்! முன் கண்டவள், பின்னரும் காண்டற்கு விரும்பிக் கூறுதல் இது. 16. பகல் முனிவுரைத்தல் புரிவளை நெகிழப் புலம்பொடு நின்றோள் பருவரல் உள்ளமொடு பகல்முனி வுரைத்தன்று. முறுக்கு வளையல்கள் கைகளினின்றும் சோரத், தனிமைத் துயரோடே நின்ற தலைவியானவள், துயரம் மிக்கதான தன் உள்ளத்தோடே, பகற்பொழுதை வெறுத்த அந்த நிலையைச் சொல்லியது, பகல் முனிவுரைத்தல் ஆகும். தன்கண் அளியவாய் நின்றேற்குத் தார்விடலை வன்கண்ணன் நல்கான் எனவாடும்-என்கண் இடரினும் பெரிதால் எவ்வம் - படரினும் பெரிதாற் பாவியிப் பகலே. 300 மாலையினை யுடைய தலைவன் தறுகண்மை உடையவன் ஆதலால், தன்னிடத்துத் தண்ணளியை விரும்பினளாய் நின்ற எனக்கு அருள் செய்யான்' என்று நினைந்து வாட்டங் கொள்ளுகின்ற என்னிடத்து நிலவுகின்றதுன்பத்தினும் காட்டில், எனது மானமே பெரிய தொன்றாகும்; பாவியான இப் பகற்பொழுதோ, அந்த என் நினைவினும் பெரிதானதாயிருந்தது! 'எவ்வம் பெரிதால் என்றது, தான் கொண்ட ஒருதலைக் காமத்தானே ஏற்பட்ட மானக்கேட்டால் வந்துற்ற பெரிதான வருத்தத்தை -