பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 17. இரவுநீடு பருவரல் புலம்பொடு வைகும் பூங்குழை கங்குற் கலங்கினேன் பெரிதெனக் கசிந்துரைத்தன்று. தனிமைத் துயரத்துடனே தங்கும் பொலிந்த குழையினை . உடையவள், இரவின்கண் பெரிதும் துன்பமுற்றேன்’ என, நெஞ்சங் கசிந்தாளாகச் சொல்லியது, இரவுநீடு பருவரல் ஆகும். இரவுப் பொழுதில் நெடியதாகத் தோன்றுதலால் வந்துற்ற . பருவரல் இது. பருவரல் துன்பம். பெண்மேல் நலிவு பிழையென்னாய் பேதுlஇ விண்மேல் இயங்கு மதிவிலக்கி-மண்மேல் நினக்கே செய்பகை எவன்கொல் - எனக்கே நெடியை வாழியர் இரவே? . 301 இராப் பொழுதே, நீ வாழ்வாயாக! ചിങ്ങമേഖ நினக்கு யான் பகையாகச் செய்ததுதான் என்னவோ? பெண் பாலினிடத்தே துன்பிழைத்தல் பிழையெனவும் கருதாயாய், அறிவுகெட்டு, விசும்பிடத்தே செல்லாநின்ற திங்களையும் போகாதபடிவிலக்கி, எனக்கே நெடியையாக இருந்தனையே! பேதுஅறியாமை மதி:திங்கள். நலிவு துன்பம் வாழியர் என்றது, இகழ்ச்சிக் குறிப்பு: வாழாது ஒழிந்து போக என்பது கருத்து. 18. கனவின் அரற்றல்-1 ஒண்டொடி மடந்தை உருகெழு கங்குலிற். கண்டவன் கரப்பக் கனவின் அரற்றின்று. ஒள்ளிய வளையல்களை உடையாளான தலைவி, அஞ்சுதல் பொருந்திய இராப்பொழுதிடத்தே, கனவிடத்தே காணப்பட்ட தலைவன் மறைந்தானாக, நனவின்கண் வாய்விட்டுப் புலம்பியது, கனவின் அரற்றல் ஆகும். . அயர்வொடு நின்றேன் அரும்படர்நோய் தீர நயம்வரும் பள்ளிமேல் நல்கிக்-கயவா நனவிடைத் தமியேன் வைகக் . கனவிடைத் தோன்றிக்கரத்தல்நீ கொடிதே. 302 கீழ்மகனே! மயக்கத்தொடும் நின்றேனாகிய எனது அரிய நினைவினாலே வந்த நோயானது தீரும்படியாக, நன்மை யுண்டாகும் படுக்கையிடத்தே, கனவிடத்தே தோற்றி எனக்குத் தண்ணளி செய்து, நனவினிடத்தே, யான் தனியளாகி இருக்கும்படியாக நீ மறைந்துபோகுதல் கொடிய செயலாகும்.