பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் காரணமான இருளினூடேயாம் செல்வேம் அல்லேம்; ஆதலாற் செலவினைத் தவிர்க என்பாய்; ஆனால், நீயோ செல்லாது நின்றாயில்லை; அங்ங்ணம் செல்லும் நீ யான் அணிந்த ஆபரணம் சோர்ந்த ஆரவாரத்தை நினைப்பாயோ, நினைக்க மாட்டாயோ? அதனைக் கூறுவாயாக. - செல்லாம் என்றது, செல்வது மகளிர்க்குமரபன்று ஆதலின், 21. நெஞ்சொடு மெலிதல்-2 வரிவளை நெகிழ்ந்தோன் முன்செலவலித்தேன் அரிவையர் அறிகென உரைப்பினும் அதுவே. அழகிய வளையலை நெகிழப் பண்ணினானது முன்பாகச் செல்வதற்குத்துணிந்தேன்; இதனை மகளிர் எல்லீரும் அறிவீராக’ என்று தலைவி சொன்னாலும், அது நெஞ்சொடு மெலிதல் என்னும் துறையேயாகும். அலர் தூற்றும் மகளிர்க்குக் கூறுவது இது தலைவன்பாற் செல்வேன் என்பது கருத்தாகக் கூறினால் பெருந்திணை ஆகும். நல்வளை ஏக நலந்தொலைவு காட்டிய செல்லல் வலித்தெனச் செம்மல்முன்-பில்லாத வம்பவுரையொடு மயங்கிய அம்பற் பெண்டிரும் அறைகவெம் அலரே. 305 - எனது நல்லவளைகள் கழன்றுபோமாறு எனது அழகழிந்த இந்த நிலையினைக் காட்டும் பொருட்டு, தலைவனின் முன்பாகச் செல்லுதலை யானும் துணிந்தேன்; இல்லாத புதிய உரையொடு கலங்கிய புறங்கூறும் பெண்டிரும், எம்முடைய இந்தச் செயலினையும் இனி எடுத்துத் துற்றுவாராக! - - தொகுத்து உரைத்தல் - கைக்கிளைப் படலத்தின் பெண்பாற் கூற்றுப் பகுதியான இது, பத்துத் துறைகளை உடையது, அவை, - - ஒருத்தி தலைவன் ஒருவனைக் கண்டு காமுற்றுச் சோர்தலாகிய காண்டலும்; தன்னை விரும்பாத அவனைத் தான் விரும்புதலைக் கூறுதலாகிய நயத்தலும்; அங்ங்னம் நயந்தவள் அவனைக் கூடுதலை நினைத்தலாகிய உட்கோளும்; அங்ங்னம் கூடலை உட்கொண்டவள், அதனால் வரும் பழிக்கு நாணி வருந்தி மெலிவுறலாகிய மெலிதலும்; அந்த