பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Heཡིu;"་ཚེ་ கேசிகன் கைக்கிளைப் படலம் - 239 மெலிவொடு காமம் வருத்த மேலும் நலிதலாகிய மெலிவொடு - வைகலும்; மெலிவொடு வைகியவள் அவனைப் பின்னரும் காணுதற்கு உறுதிகொள்ளுதலான காண்டல் வலித்தலும்; அவள் துன்பமிகுந்த நெஞ்சினளாகப் பகற்பொழுதை வெறுத்துக் கூறுதலாகிய பகல்முனி வுரைத்தலும்; அவள் இரவுநீட்டித்தற்கு வருந்திக் கூறுதலாகிய இரவுநீடு பருவரலும்; - கனவிடைத் தோன்றியவள் நனவிடை மறைதலால் அவள் வாய்விட்டுப் புலம்புதலும், இரவிற் கனவிடை அவன் வரின் உய்வேன் எனக் கூறுதலுமாகிய கனவின் அரற்றலும்; அவள், இரவுப் பொழுதிலே தலைவனது இருக்கைக்குச் செல்லக் கருதிய தன் மனவிருப்பினைச் சொல்லியதும், அவர் கூறும் பெண்டிர்க்கு, யான் அவன்முன் செல்லத் துணிந்தேன் எனக் கூறலுமாகிய நெஞ்சொடு மெலிதலும் ஆம். - XXXXXX