பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 12. பெருந்திணைப்படலம் - (பெருந்திணையாகிய இதனைத் தொல்காப்பியம் அகத்திணையுட் கொள்ளும். கந்தருவத்துட்பட்டு வழிஇயிற்றாகச் செப்பிய இந்நான்கும் பெருந்திணைக் கருத்து எனவும் உரைக்கும். இந்நூலாசிரியரோ, இதனை அகப்புறமாகக் கொண்டு கூறுகின்றனர்.) கைக்கிளை, ஒருதலைக் காமத்தினை உணர்த்திற்று; இது மிகைபடு காமமாகிய தன்மையைச் சொல்லுகின்றது. 'ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. - - (தொல், அகத் 5) என்ற விதி, - மடன்மாக் கூறுதலொடு நில்லாது மடலேறுதலும்; தலைவனுக்குத் தலைவி இளையளாகாதுபோயின தன்மையும்; தெளிவுகொள்ளுதல் ஒழிந்த அறவழி குணன் உடையளாதலும்; காம மிகுதியானே எதிர்ப்பட்டுழி வலிதிற் புணர்தலும் ஆகிய, அன்பு நெறியினின்றும் வழிஇயின நான்கும், பெருந்திணைப் பகுதிப்பாற்படும் என்கின்றது. இதனை நினைவிற் கொள்ளல் வேண்டும். - - 1. பெண்பாற் கூற்று (பெருந்திணை ஒழுக்கத்திற்குரிய பெண்பாற் கிளவிகள் பற்றிய பகுதி) வேட்கைமுந் துறுத்தல் பின்னிலை முயறல் பிரிவிடை ஆற்றல் வரவெதிர்ந் திருத்தல் வாராமைக் கழிதல் இரவுத்தலைச் சேறல் இல்லவை நகுதல் புலவியுட் புலம்பல் பொழுதுகண் டிரங்கல் பரத்தையை ஏசல் கண்டுகண் சிவத்தல் காதலிற் களித்தல் கொண்டகம் புகுதல் கூட்டத்துக் குழைதல் ஊடலுள் நெகிழ்தல் உரைகேட்டு நயத்தல் பாடகச் சீறடிபணிந்தபின் இரங்கல்