பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்ட்பெருந்தினைப்படலம் 241 பள்ளிமிசைத் தொடர்தல் செல்கென விடுத்தலென ஒன்பதிற்றிரட்டியோ டொன்றும் உளப்படப் பெண்பாற் கூற்றுப் பெருந்திணைப் பால. (16) பெருந்திணைக்கு உரிய பெண்பாற் கிளவிகள் யாவை என - உணர்த்துவது, இச் சூத்திரம், அவை, வேட்கை முந்துறுத்தல், பின்னிலை முயறல், பிரிவிடை ஆற்றல், வரவெதிர்ந்திருத்தல், வாராமைக்கு அழிதல், இரவுத் தலைச் சேறல், இல்லவை தருதல், புலவியுட் புலம்பல், பொழுதுகண் டிரங்கல், பரத்தைய ஏசல், கண்டு கண் சிவத்தல், காதலிற் களித்தல், கொண்டகம் புகுதல், கூட்டத்துக்குழைதல்,ஊடலுள் நெகிழ்தல்,உரைகேட்டுநயத்தல், பாடகச் சீறடி பணிந்த பின் இரங்கல், பள்ளிமிசைத் தொடர்தல், செல்கென விடுத்தல் ஆகிய பத்தொன்பதும் ஆம் . அவற்றுள்: . 1. வேட்கை முந்துறுத்தல் . கையொளிர் வேலவன் கடவக் காமம் . மொய்வளைத் தோளி முந்துற மொழிந்தன்று. கையிடத்தே ஒளிர்கின்ற வேலினையுடைய தலைவனைக் காமமானது செலுத்தாநிற்பச், செறிந்த தொடியாற் சிறந்த தோளினையுடையவள், தலைவனுக்கு முன்பாகத் தன் வேட்கையைச் சொல்லியது, வேட்கை முந்துறுத்தல் ஆகும். கடவல்-செலுத்தல், மகளிர் தம் வேட்கையைத் தாமே முற்படச் சொல்லி வேண்டுதல் இயல்பன்று ஆதலின், இது பெருந்திணை ஆயிற்று. - எழுதெழின் மார்பம் எனக்குரித் தாகென்று அழுதழுது வைகலும் ஆற்றேன்-தொழுதிரப்பல் வல்லியம் அன்ன வயவேலோய் வாழ்கென - அல்லியந்தார் நல்கல் அறம். 306 புலியைப் போன்றோனும், வலியவேலினை உடையோனும் ஆகிய தலைவனே! சந்தன குங்குமச்சேற்றால் வரிக்கும் அழகினை யுடைய நினது மார்பகம், எனக்கே உரிமை உடையதாக வேண்டுமென்று, நாள்தோறும் அழுதழுது, இனி உயிரோடிருத் தலையும் ஆற்றேனாயினேன்; நின்னைத் தொழுதுவேண்டுவேன்; நீ வாழ்க என்று சொல்லி, நினது அல்லியினை யுடைய மாலையினை முயங்குதற்குத் தருதல்தான் அறமாகும். தார் நல்கலாவது தழுவி இன்புறுத்தல்