பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

geolusië Gaëleen * Club#ensmuut-of 243 தொடிகளும் என் கையை விட்டுப் போவனவாக ஊரிலுள்ள பெண்டிரும் அலர் கூறி என்னைத் தூற்றுவாராக! கோடு:சங்கு தாழை மலருக்கு உவமை.இதனால், அதுவெண் தாழை என்பதும் அறியப்படும். . , , 4. வரவெதிர்ந்திருத்தல் முகைபுரை முறுவல் முள்ளெயிற்றரிவை வகைபுனை வளமனை வரவெதிர்ந்தன்று. முல்லை யரும்பினைப் போலும் நகையாற் சிறந்த கூரிய பல்லினையுடைய மடவாள், பலவகையாகப் புனைந்திருக்கப் பட்ட தன் வளமான மனையிடத்தே, தலைவனது வருதலை ஏற்றிருந்தது. வரவெதிர்ந்திருத்தல் ஆகும். . காம நெடுங்கடல் நீந்துங்காற்கைபுனைந்த பூமலி சேக்கைப் புணைவேண்டி - நீமலிந்து செல்லாய் சிலம்பன் வருதற்குச் சிந்தியாய் . எல்லாக நெஞ்சம் எதிர். 309 என் நெஞ்சமே காமமாகிய நெடுங்கடலினை நீந்துமிடத்து, ஒப்பனை செய்யப்பெற்றதும் மலர்கள் மிகுந்ததுமான படுக்கையிடத்துப் பெறும் கூட்டமாகிய தெப்பத்தினது துணையினை வேண்டுவாயாக, நீ விரைந்து போகமாட்டாய்! தலைவனாகிய சிலம்பன் விரைந்து வருதலைக் குறித்தும் சிந்திக்க மாட்டாய் நீ மயக்கம் நீங்கி விளக்கம் உறுவாயாக 'நெஞ்சமே! நீ எல்லாக' என்றதனால், 'நீ விரைந்து தலைவன்பாற் செல்லுக, அவன் வருதற்குச் சிந்திக்க’ என்றனளாயிற்று. நெஞ்சொடு புலந்து, தலைவி இங்ங்னம் கூறினளாம். 5. வாராமைக்கு அழிதல் . நெடுவேய்த் தோளி நிமித்தம் வேறுபட - வடிவேல் அண்ணல் வாராமைக் கழிந்தன்று. நெடிய மூங்கிலைப் போன்ற தோளினை யுடையாளான தலைவி, நிமித்தமானது வேறுபட்டதனாலே, வடித்த வேலினை யுடைய தலைவன் வாராது ஒழிவன் என்று கருதியவளாகத் தன் நெஞ்சழிந்தது, வாராமைக்கு அழிதல் ஆகும். நுடங்கருவி ஆர்த்திழியும் நோக்கருஞ் சாரல் இடங்கழி மான்மாலை எல்லைத்-தடம்பெருங்கண் தாரார மார்பன் தமியேன் உயிர்தளர வாரான்கொல் ஆடும் வலம். 310