பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் எனது மிகப் பெரிய கண்ணானது வலப்பக்கத்தே துடியா நின்றது; அசையும் மலையருவி ஆரவாரித்து வீழும், நோக்குதற்கு அரிதான மலைப்பக்கத்தே, எல்லை கடந்த காமத்தையுடைய இம் மாலைப் பொழுதிற்குள்ளாக, மாலையாற் சிறந்ததும் சந்தனத்தை உடையதுமான மார்பினை உடையவனான தலைவன், என்னுடைய உயிரானது தளரும்பொருட்டாக, இனியும் வரமாட்டான் போலும்! 'கண் வலமாகத் துடித்தலால் அவன் வாரான் போலும் என் உயிர் மேலும் தளரும் என, நிமித்தம் வேறுபடக் கண்டவள் புலம்பினாள். 6. இரவுத்தலைச் சேறல் காண்டல் வேட்கையொடு கனையிருள் நடுநாள் மாண்ட சாயன் மனையிறந்தன்று. தலைவனைக் காணல் வேண்டுமென்னும் விருப்பத்தோடே, செறிந்த இருளினையுடைய இரவின் நடுயாமத்தே, மாட்சிமைப் பட்ட சாயலினை உடையவளான தலைவி, தன் இல்லினின்றும் வெளியேறிச் சென்றது, இரவுத்தலைச் சேறல் ஆகும். பணையா வறைமுழங்கும் பாயருவி நாடன் பிணையார மார்பம் பிணையத்-துணையாய்க் கழிகாமம் உய்ப்பக் கனையிருட்கண் செல்கேன் வழிகாண மின்னுக வான். 311 கற்பாறையிடத்தே வீரமுரசத்தைப் போலப் பாய்கின்ற அருவியானது, முழக்கத்தைச் செய்யும் நாட்டினையுடையவன்நம் தலைவன்; அவனது, மூட்டுவாயினையுடைய ஆரமணிந்த மார்பத்தினைத் தழுவுதற்கு, எனக்குத் துணையாய் மிக்க ஆசையானது என்னைச் செலுத்த, யானும் போவேன்; யான் வழியைக் காணுதற்கு உதவியாக, மேகமே, நீயும் மின்னலினை இடுவாயாக! - - - 7. இல்லவை நகுதல் இல்லவை சொல்லி இலங்கெயிற்றரிவை நல்வயல் ஊரனை நகைமிகுத்தன்று. விளங்கும் பல்லினை யுடைய மடவாள், உள்ளன அல்லாதவற்றைச் சொல்லி, நல்ல கழனிகளை யுடைய ஊருக்கு உரியவனான தன் தலைவனை நகை மிகுத்தது, இல்லவை நகுதல் ஆகும. -