பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் பெருந்திணைப்படலம் 245 தலைவி, தானே தனக்குள் கூறிக்கொண்டு நகையாடுதல் இதுவாகும். . * - முற்றா முலையார் முயங்க இதழ்குழைந்த நற்றார் அகலம் நகைதரலின் - நற்றார் கலவேம் எனநேர்ந்துங் காஞ்சிநல்லூர - புலவேம் பொறுத்தல் அரிது. 312 காஞ்சி மரத்தையுடைய நல்ல ஊரனே! முற்றாத இளமுலைகளை உடையவரான பரத்தையர் தழுவ, அதனால் இதழ்வாடின நல்ல மாலையினையுடைய நின் மார்பம், எனக்கு நகைப்பைத் தருதலானே, யாம், அழகிய அந்த மாலையினொடு பொருந்தமாட்டேம் என உறுதி கொண்டிருந்தும், நின்பால் ஊடமாட்டேம்; ஏனெனில், நின்பால் ஊடின், அதனைப் பொறுத்தல் என்பது எமக்கு அரிதாயிருக்கும். - 8. புலவியுட் புலம்பல் நல்வளை மடந்தை நற்றார் பரிந்து புலவி யாற்றுள் புலம்புற் றன்று. அழகிய தொடியினையுடைய மடவாள், தலைவனது நல்ல மார்பின் மாலையினை அறுத்தும், தன் ஊடல் ஆற்றாளாகத் தனிமையுற்றுப் புலம்புதல், புலவியுட் புலம்பல் ஆகும். ஓங்கிய வேலான் பணியவும் ஒள்ளிழை தாங்காள் வரைமார்பின் தார்பரிந்து-ஆங்கே அடும்படர் மூழ்கி அமைமென்தோள் வாட நெடும்பெருங்கண் நீந்தின கண். 313 ஒளிகொண்ட அணிகளை உடையவளான தலைவி, உயர்ந்த வேலினையுடைய தலைவன்தன்னைப் பணியவும்,தான் கொண்ட சீற்றம் தாளாதாளாக, அவனது மலையன்ன மார்பிடத்தே விளங்கிய மாலையினை அறுத்தும், வ்ருத்துந் துயரத்திலே மூழ்கினளாகத், தனது மூங்கிலைப் போன்ற மென்மையான தோள்கள் வாடாநிற்ப நின்றாள்; அவ் விடத்து, அவளது நீண்ட பெரிய கண்கள் நீரிலே மிதந்தன! 9. பொழுது கண்டு இரங்கல் நிற்றல் ஆற்றாள் நெடிதுயிர்த் தலமரும் பொற்றொடியரிவை பொழுதுகண் டிரங்கின்று. உயிர் உடலொடுங்கூடி நிற்றலையும் பொறாதவளாக, நெட்டுயிர்த்துச் சுழலும் பொன்வளையலையுடைய தலைவி யானவள், மாலைப்பொழுதினைக் கண்டு வருந்தியது, பொழுது கண்டு இரங்கல் ஆகும். . .