பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்-பெருந்திணைப்படலம் 247 11. கண்டுகண் சிவத்தல் உறுவரை மார்பன் ஒள்ளிணர் நறுந்தார் கறுவொடு மயங்கிக் கண்சிவந்தன்று. பெரியமலைபோன்ற மார்பத்தினை உடையவனது,ஒள்ளிய கொத்தினையுடைய நறுமணங்கமழும் மாலையினை முனிவோடே பார்த்துக் கலங்கித், தலைவி, தன் கண்சிவந்தது, கண்டு கண் சிவத்தல் அகும். - கூடிய கொண்கன் குறுகக் கொடிமார்பின் ஆடிய சாந்தின் அணிதொடர்ந்து-வாடிய தார்க்குவளை கண்டு தரியா இவள்முகத்த கார்க்குவளை காலுங் கனல். 316 மணந்த கணவன் அணுகவும், கொடிபோன்ற பரத்தையது மார்பிடத்துத் தோய்ந்த சந்தனத்தின் அழகு மேவி அதனால் வாடியிருந்த செங்கழுநீர் மாலையைக் கண்டு, பொறாவாய், இவளுடைய முகத்திலுளவாகிய, கருங்குவளை மலர் போலுங் கண்கள், தாம் நெருப்பைச் சொரியுமே! - 'கொடி பரத்தையைக் குறித்தது. நெருப்புச் சொரிதல்சினத்தாற் கண்சிவத்தல். 12. காதலிற் களித்தல் மைவரை நாடன் மார்பகம் பொருந்திக் கைவிடல் அறியாக் காதலிற் களித்தன்று. தலைவியானவள், மேகம் பொருந்தின மலைநாடனான தலைவனுடைய மார்பகத்திலே தழுவியபடி, இருந்தாளாகி, அதனைக் கைவிடற்கும் அறியாத தன்மையளாகக், காதன் மிகுதியாற் களித்தது, காதலிற் களித்தல் ஆகும். காதல் பெருகிக் களிசெய்ய அக்களியாற் கோதையுந் தாரும் இடைகுழைய - மாதர் கலந்தாள் கலந்து கடைக்கண்ணாற் கங்குல் - புலந்தாள் புலரியம் போது. 317 காதலானது பெருகிக் களிப்பினைச் செய்யாநிற்ப, அக்களிப்பினது மிகுதியினாலே தன் மார்பிற் கோதையும் தலைவனது மார்பின் தாரும் தம்மிடையே குழைந்துபோகத், தலைவியானவள் தலைவனுடனே கூடினாள்; அங்ங்னம் கூடியவள், விடியற்காலைப் பொழுதிலே, இரவு விரைந்து கழிந்தமைக்கு வருந்தினளாக, இரவுப் போதையும் தன் கடைக்கண்ணாற் சினந்தாள். - இதனாற். காதலிற் களித்தது நன்கு புலனாயிற்று.