பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

навів கேசிகன் பெருந்திணைப்படலம் 251 பரந்த இருட்பொழுதிலே, சிவந்த அணிகளையுடைய தலைவியானவள், கணவனுடைய செல்கையைக் கண்டு, நீசெல்க' எனக் கூறிப்போக விடுத்தது, செல்கென விடுத்தல் ஆகும். விலங்குநர் ஈங்கில்லை வென்வேலாய் சென்றீ இலங்கிழை எவ்வம் நலியக் - கலங்கிக் குறியுள் வருந்தாமைக் குன்றுசூழ் சோலை நெறியுள் விரிக நிலா. 324 வெற்றி வேலினை உடையாய்! இவ்விடத்தே நின்னைத் தடுப்பவரோ எவருமில்லை; குறியிடத்தே நின் வரவினுக்குக் காத்திருக்கும் விளங்கும் அணிகலன்களை உடையவள், துன்பம் வருத்தத் தான் நெஞ்சங் கலங்கி வருந்தாமற்படிக்கு நீ அவள்பாற் செல்வாயாக! அங்ங்னம் நீ செல்லும்போது, குன்றுகள் சூழ்ந்த சோலையிடத்து வழியின்கண், நிலவும் கதிர்விரித்து நினக்கு உதவுமாக - - 'இலங்கிழை என்றது, யவளான தலைவனது காதற் - էՔ றது, பு த து கு உரியவளை. - தொகுத்து உரைத்தல் பெருந்திணைப் படலத்துப் பெண்பாற் கூற்று, மேலே சொல்லியவாறு பத்தொன்பது துறைகளாக நிகழும் அவை: தலைவனுக்கு முற்பட்டுத் தலைவி தனது வேட்கையைக் கூறுதலாகிய, வேட்கை முந்துறுத்தலும், தலைவி தலைவனை இருந்து பின்னிற்றற்கு மேற்கொள்ளலாகிய, பின்னலை முயறலும், தலைவனது பிரிவினைத் தலைவி ஆற்றியிருத்தலாகிய பிரிவிடை ஆற்றலும், மனையிடத்தே தலைவனது வருகையை ஏற்றிருத்தலாகிய, வரவெதிர்ந்திருத்தலும் தீநிமித்தத்தால் தலைவன் வாரான் எனக் கருதித் தலைவி நெஞ்சழிதல் ஆகிய வாராமைக்கு அழிதலும்; தலைவனைக் காணும் ஆசையுடனே, தலைவி இரவிடத்தே மனைகடந்து போதலாகிய, இரவுத்தலைச் சேறலும்; தலைவன்பால் இல்லாத பழியை உள்ளதாகக் கூறித் தலைவி நகுதலாகிய இல்லவை நகுதலும்; தலைவனோடு ஊடி நின்று தலைவி புலம்புதலாகிய புலவியுட் புலம்பலும்; மாலைப் பொழுதைக் கண்டு தலைவி வருந்துதலாகிய பொழுது கண்டு இரங்கலும்; தலைவனொடு நீர் விளையாட்டை விரும்பித், தலைவி பரத்தையைப் பழித்தலாகிய, பரத்தையை ஏசலும், பரத்தை