பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்- பெருந்தினைப்படலம் 255 தண்டார் அகலம் தழுஉப்புணையா நீநல்கின் உண்டாமென் தோழிக் குயிர். 328 ஒளி கொண்ட வேலினாய்! நெஞ்சிடத்தே துயரமானது பெருக,இகழ்தற்கு முடிவுசெய்த இருளினையுடைய மாலையாகிய வெள்ளத்திடத்தே, குளிர்ந்த மாலையினையுடைய நின் மார்பத்தைத் தழுவிக் கரைசேர்தற்குரிய தெப்பமாக நீ தந்தருளினால், என் தோழியாகிய தலைவிக்கு, உயிரும் உண்டாயிருக்கும். நல்காயேல் உயிரிழப்பாள் என்பது, குறிப்பு. 24. கண்டு கைசோர்தல் போதார் கூந்தற் பொலந்தொடி யரிவை காதல் கைம்மிகக் கண்டுகை சோர்ந்தன்று. மலர் நிறைந்த கூந்தலினையும், பொன்னாலான தொடியினையும் கொண்டு விளங்குந் தலைவியது காதல்நோய் கைகடந்து பெருக, அதனைக் கண்ட தோழி, தானும் செயலறவு கொண்டது, கண்டு கைசோர்தல் ஆகும். - ஆம்பல் நுடங்கும் அணிவளையும் ஏகின கூம்பல் மறந்த கொழுங்கயற்கண் - காம்பின் எழில்வாய்ந்த தோளி எவனாங்கொல்கானற் பொழிலெல்லாம் ஈயும் புலம்பு? 329 ஆம்பலது தண்டை வளைத்து இட்ட அழகிய வளையும் .. கழன்று போயின; கொழுவிய கயல்மீனைப் போன்ற கண்களும் துயிலை மறந்தன; மூங்கிலினும் அழகு வாய்ந்த தோள்களை யுடைய தலைவி இனி என்னாகுவளோ? கடற்கரைச் சோலை இடமெல்லாம் அவளுக்குத் தனிமைத் துயரினைத் தருமே! 'கானற் பொழில் தனிமையைக் காட்டுதலால், துயர் நல்கும் என்க. . . . 25. பருவ மயங்கல்-1 உருவ வால்வளை உயங்கத் தோழி பருவ மயங்கிப் படருழந் தன்று. அழகிய வெள்ளியவளையினை உடையாள் வருந்தத் தோழி காலத்தை அன்றாமென ஐயுற்று வருத்தமுற்றது, பருவ மயங்கல் ஆகும். - - பருவத்தை ஐயுற்று மயங்குதல் இது. இது, தோழி ஆற்றுவிக்கும் வகையன்று ஆதலின், பெருந்திணை ஆயிற்று என்பர் உரையாசிரியர். - - - . - -