பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்ட்பெருந்திணைப்படலம் 261 தண்டார் அணியவாம் தையலார் சேரியுள் வண்டார் வயலூரன் வைகினமை-உண்டால் அறியேன் அடியுறை ஆயிழையால் பெற்றேன் சிறியேன் பெரிய சிறப்பு. 340 குளிர்ந்த மாலையினையுடைய அழகினை விரும்புகின்ற வரான பரத்தையரது சேரியினுள்ளே, வண்டினம் மொய்க்கின்ற கழனியினை உடையவனான தலைவன் தங்கியிருந்தமை உண்டு; ஆனால், யான் அதனைத் தெளிவுற அறியேன் அடி பொருந்தும் ஆராய்ந்த அணிகளையுடைய தலைவியாலே, சிறிய யான் பெரிய சிறப்பினையும் இப்போது பெற்றேன். தலைவனது பரத்தைமையை அறிந்து வைத்தும், காதலர்க்குள் பிணக்கினை வளர்க்க விரும்பாதவளான விறலி, 'உண்டால் அறியேன்” எனப்பட்டும்படாமலும் உரைக்கின்றனள். 36. குற்றிசை பொற்றார் அகலம் புல்லிய மகளிர்க்கு அற்றாங் கொழுகா தறங்கண் மாறின்று. தலைவன், தனது அழகிய மாலையுடைய மார்பினைத் தழுவிய மகளிர்க்கு அற்றறுதிப்பட்டு நடவாது, அறத்தைக் கண்மறுத்து நடந்தது, குற்றிசை ஆகும். அற்றாங்கு ஒழுகுதல்-ஒன்றைக் கடைப்பிடியாகக் கொண்டு இறுதிவரைக்கும் பிறழாது நடத்தல். குற்றிசை-குறுகிய புகழ். அறங்கண் மாறல் அறம் பிறழ்ந்து ஒழுகுதல். கரிய பெருந்தடங்கண் வெள்வளைக்கையாளை மரிய கழிகேண்மை மைந்த-தெரியின் விளிந்தாங் கொழியினும் விட்டகலார் தம்மைத் தெளிந்தாரில் தீர்வது தீது, 341 கரியவாய் மிகவும் பெரிய கண்களையும்,வெள்ளியவளைகள் விளங்கும் கைகளையும் உடையவளைப், பொருந்திய மிக்க தொடர்ச்சியினை யுடைய தலைவனே! ஆராய்ந்தால் இறந்து படினும் விட்டு நீங்காராய் தம்மைத் துணையென்று தேறின. மகளிரிடத்து நின்றும் விலகுவது, மிகவும் தீமை உடையதாம். 37. குறுங் கலி நாறிருங் கூந்தன் மகளிரை நயப்ப வேறுபடுவேட்கை வீயக் கூறின்று.