பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Houyńš Gaâsëi * ®¡lu - 265 பயிலாதனவற்றை எல்லாம் இப் பகுதியுள் உரைக்கின்றனர். இயல்பாகக் காணப்படும் கொளுவினை இப்பகுதியுள் அவர் இயற்றவில்லை; துறைத் தலைப்புகளுக்கு நேராகவே வெண்பாக்களைச் சொல்லிச் செல்லுகின்றனர். அவற்றுள்: 1. கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல் (வறியவர்க்கு ஒரு பொருளை மனமுவந்து கொடுக்கின்ற குணமுடையவரைப் புகழ்ந்து, அங்ங்னம் கொடைத்தன்மை இல்லாதாரான கஞ்சரைப் பழித்தல்) சீர்மிகு நல்லிசைபாடிச் செலவயர்தும் கார்முகில் அன்னார் கடைநோக்கிப்-போர்மிகு மண்கொண்ட வேல்மற மன்னரே ஆயினும் - வெண்கொண்டல் அன்னாரை விட்டு. 343 போரினிடத்தே மிகுதிப்பாட்டினைச் செலுத்திப்பகைவரது நாட்டினைக் கைப்பற்றிக் கொண்ட, வெற்றிவேலினையுடைய மறவேந்தரே யானாலும், பெய்யாத வெண்மேகத்தைப்போன்ற அத்தகையாரை ஒதுக்கிவிட்டுக், கார்மேகத்தைப்போல வண்மையுடையாரது சீர்மை மிகுந்த நல்ல புகழினைப் பாடி, அவரது வாயிலை நோக்கியே யாம் செல்வதற்கு விரும்புவோம். கொடுப்பாரைப் போற்றியதும்; கொடாதாரைப் பழித்ததும் காண்க. 2. வாணிக வென்றி (வாணிகத்தால் பெரும்பொருள் ஈட்டி, ஈட்டியதனைப் பலருக்கும் கொடுத்துதவி வாழுகின்ற, வணிகரது சிறப்பினைக் கூறுதல்) காடுங் கடுந்திரை நீர்ச்சுழியும் கண்ணஞ்சான் சாடுங் கலனும் பலவியக்கி-நீடும் ~ பலிசையாற் பண்டம் பகர்வான் பரியான் கலிகையால் நீக்கல் கடன். ~ 344 காட்டையும் கடிய அலையை யுடைய நீர்ச்சுழியையும் கடத்தற்கு அஞ்சாதவன்; சகடம் பலவும், மரக்கலம் பலவும் இடந்தோரும் செலுத்தி, நீடுகின்ற ஊதியங் காரணமாகப் பல பண்டங்களையும் விற்பவன்; இவன், பொருளில் பற்றிலாதவனாகப் பிறருடைய வறுமைத் துயரை நீக்குதல் கடமையாகும். - • சாடு-சகடம், கலம்-மரக்கலம் பலிசை-ஊதியம்.கலி-வறுமை.