பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் உயரிய மலையிடத்தே, நீண்ட மூங்கில்கள் ஒலிக்கின்ற தன்மையுடைத்தான ஊரினது நடுவிடத்தே, பகைவரது திரளான ஆநிரைகளைக் கைக்கொண்டவராக, அவ்விடத்து நின்று நீங்காதவருமாக, நிணத்தைக் கோத்த வேலினை உடையவரான வெட்சி மறவர்கள் நின்றிருந்த நிலையானது, புலிகள் ஒன்றுகூடித் திரண்டு ஓரிடத்தே கூட்டமிட்டிருந்ததன்மைத்தாகும். - இது கண்டோர் உரைப்பது. கொடுவரி-புலி, வளைந்த கோடுகளை உடைமையால் புலிக்குப் பெயராக ஆயிற்று. நரலல்ஒலித்தல். கையகலார்-இடம் விட்டுப் பெயராதாராய். இதனால், ஆகொண்டு நின்ற வெட்சி மறவரின் பேராண்மையும் கடுஞ்சினமும் விளங்கும். . . . 8. பூசன் மாற்று கணம் பிறங்கக் கைக்கொண் டார் பிணம் பிறங்கப் பெயர்த்திட்டன்று. ஆநிரைகளை மிகுதியாகக் கைக்கொண்டவரான வெட்சி மறவர்கள், தம்மைப் பின் தொடர்ந்தவராக அவற்றை மீட்பதற்கு வருகின்ற கரந்தை மறவரை, முற்றவும் பிணங்கள் மிகுமாறு கொன்று அழித்து, அவருடைய பூசலை மாற்றுவது, பூசன் மாற்று ஆகும். - - பூசன் மாற்று போரினை இல்லையாக்குதல். இது, வெட்சியார் ஆநிரைகளைக் கவர்ந்து தம்முடைய நாடுநோக்கிச் செல்லுங்காலத்து இடைவழியில் நிகழும் என்பர். சூழ்ந்த நிரைபெயரச் சுற்றித் தலைக்கொண்டார் வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணியத் தாழ்ந்த குலவுக் கொடுஞ்சிலைக்கைக் கூற்றனையார் எய்த புலவுக் கணைவழிபோய்ப்புள். - 10. வெட்சி மறவராலே வளைத்துக்கொள்ளப்பட்ட நிரையானது மீளுமாறு, அவரைச் சூழ்ந்து போரினை மேற்கொண்ட கரந்தை மறவர்கள், பட்டு வீழ்ந்தனர். வளைந்த கொடிய வில்லினாற் சிறப்புற்ற கையினை உடையவரும், கூற்றத்தை ஒப்பவருமான அவ்வெட்சி மறவர் எய்த, புலால் நாற்றத்தினையுடைய அம்பு போன வழியினைத் தாமும் பின் பற்றிச் சென்றவாய்ப், புள்களும் பிணங்களிற் படிந்தவாயின. தலைக்கொண்டார்.போரிடலைமேற்கொண்டார் கரந்தை மறவர்கள், கணை சென்ற வழிச் சென்று படிந்தன புள்கள் என்றதனால், அம் மறவரது வில்லாண்மை கூறப்பெற்றது; பூசலை மாற்றி நிற்கும் நிலையும் இதனால் உணரப்படும். -