பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக்கன் டவிட 267 குடைவரைஏ ந்தியநம் கோவலனே கொண்டான் அடையவிழ் பூங்கோதை யஞ்சல்-விடையரவம் மன்றங் கறங்க மயங்கப் பறைபடுத்து இன்று நமர்விட்ட ஏறு. - 347 - - - இலைகள் விரிந்த பூமாலையினை யுடைய தலைவியே! நீ எதற்கும் அஞ்சாதேகொள்; மன்றிடத்தே மிக்க ஆரவாரம் முழங்கும்படியும், கண்டார் மயங்கும்படியும் பறையறைந்து இன்று நம் உறவு முறையார் விட்ட கொல்லேற்றினை, குடையாக மலையினை ஏந்திய நம்முடைய தலைவனான, ஆயனே தழுவி வெற்றி கொண்டான், அதனைக் காண்பாயாக . மாயவன்' என்றது, அவனைப் போன்ற தன் காதலனை. -- 6.கோழி வென்றி (சேவற் கோழியைப் பொருதற்கு விடுத்து அதன்கண் கொண்ட வெற்றியைச் சிறப்பித்தது) பாய்ந்தும் எறிந்தும் படிந்தும் பலகாலும் காய்ந்தும்வாய்க் கொண்டுங் கடுஞ்சொல்லார்-ஆய்ந்து நிறங்கண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப் - புறங்கண்டும் தான்வருமே போர்க்கு. 348 கடிதாகக் கூவுதலையுடைய கோழிச் சேவலானது மேலெழப் பாய்ந்தும், தன் காலின் முள்ளையிட்டு இடித்தும், தாழ்ந்தும், பலகாற் சினந்தும், வாயாற் கொத்தியும் போரிடுகின்ற ஆற்றலை ஆராய்ந்து, நிறங்கண்டு, வல்லார் பொருதவிட்ட சேவற் கோழியைப் புறங்கண்டபின்னரும், சினம் தீராமையால், மீண்டும் பொருதற்கு வாராநின்றது! சொல்லுக்குச்சொல்வெல்லும், ஆமைக்கு ஆமை வெல்லும், தெங்குக்குத் தெங்கு வெல்லும் எனக், கோழிகளின் நிறமறிந்து விடுதல் இது என்பர் பழைய உரையாசிரியர். இவை, கோழி வகைகள் ஆம் - 7. தகர் வென்றி (ஆட்டுக்கடாச் சண்டையிலே அடைகின்ற வெற்றியைச் சொல்லியது) - . . - அருகோடி நீங்கா தணைதலும் இன்றித் திரிகோட்ட மாவிரியச் சீறிப் - பொருகளம் புக்கு மயங்கப் பொருது புறவாயை . . நக்குமாம் நல்ல தகர். - 349