பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் நல்ல போரியல்பு கொண்ட ஆட்டுக் கடாவானது, தனது எதிர்க் கடாவின் அருகே ஒடி, அதனைவிட்டு நீங்காமலும் மிக நெருங்குதல் இல்லாமலும், முறுக்கமைந்த கொம்புகளையுடைய எதிர்த்த கடாவானது கெட்டோடும்படியாகச் சினந்து போர்க்களத்தே புகுந்து, கலங்கப் போரிட்டு அதனை வென்று, தனது புறவாயினை நக்கியபடியே நிற்கும். - 8. யானை வென்றி (யானைகளைத் தம்முட் பொருதற்கு விடுத்துக் கொண்ட வெற்றியைச் சொல்லியது) கஞ்சுகம் வாய்த்த கவளந்தன் கைக்கொண்ட குஞ்சரம் வென்ற கொலைவேழம் - துஞ்சாது உழலையும் பாய்ந்திறுத் தோடாது தான்தன் நிழலையும் தான்சுளிக்கும் நன்று. 350 அட்டி மதுரமிட்டுத் திரட்டின கவளத்தைத் தன் கையிலே கொண்ட யானையை வென்ற, கொலைத் தொழிலாற் சிறந்த வேழமானது, அச் சினம் ஆறாதபடியினாலே, உறங்குதலையும் செய்யாது, கணையத்தையும் செய்யாமல், தான் தன்னுடைய நிலையையும் வெகுண்டு,துகைத்து நிற்கும்! கஞ்சுகம் அட்டி மதுரம், அதிமதுரம் என்பர் சிலர் உழலை. கணையமரம். சுளிக்கும்-காலால் துகைக்கும். 9. பூழ் வென்றி (குறும்பூழ்ப் பறவையைப் போருக்குவிட்டுக் கொள்ளும் வெற்றியைச் சொல்லியது) சொல்லுஞ் சுவட்டவர் சொல்லுக சொல்லுங்காற் சொல்லும் பலவுள. சொன்னபின் - வெல்லும் நலம்வர நாடி நடுங்காது நூற்கண் புலவரால் ஆய்ந்தமைந்த பூழ். 351 நூற்பழக்கம் யாதுமின்றியே சொல்லாநின்ற குறும்பூழாடிகள் தாம் வேண்டுவனவற்றைச் சொல்லுக; சொல்லுமிடத்துச்சொல்லக்கடவதான மந்திரங்கள் பல உள்ளன; நன்மையுண்டாகும்படி ஆராய்ந்து, கலங்காது, நூலிடத்து அறிவுடையாரால் இலக்கணம் ஆராய்ந்து மதித்த பூழ், அவற்றை முறையாகச் சொன்னதன் பின்பே, தான் போரினை வெல்லும். சொல்லக்கடவ மந்திரம் பலவாவன: தீற்றும் அரிசி ஒது மந்திரமும; பச்சிலை பிசைந்து தடவும்போது சொல்லும் மந்திரமும், செவியுள்ளுறுத்து மந்திரமும்’ என்பர், பழைய உரையாசிரியர்.