பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் -ஒழிபு - 269 10. சிவல் வென்றி (சிவல்களைப்பொருதற்கு விடுத்துக் கொள்ளும் வெற்றியைச் சொல்லியது. சிவல் என்பது, கவுதாரி என்னும் பறவை) ஒட்டியார் எல்லாம் உணரார் புடைத்தபின் விட்டோடவேண்டுமோ தண்ணுமை-விட்ட சுவடேற்கும் ஆயிற் சுடரிழாய் சோர்ந்து கவடேற்க வோடும் களத்து. 352 ஒளிசுடருகின்ற அணிகலன்களையுடைய நங்கையே! பந்தயங் கூறும் சிவலினை உடையவர் எல்லாரும் அறியார்; நமது சிவல் எதிர்ச்சிவலைத் தாக்கிய பின்புதான் தண்ணுமையைக் கைவிட்டு ஒடல் வேண்டுமோ? இவர்கள் போர்க்கு விட்ட சிவலுள் யாதானும் ஒன்று அடிப்பாட்டினின்று நம் சிவலை எதிர்க்குமாயின் போர்க்களத்தே அது சோர்வுற்று, நம் சிவலின் கவட்டுள் புகுந்து கண்டோர் நகைக்க ஒடுமே! சுவடு-அடிப்பாடு. ஒட்டியார் - பந்தயங் கூறுவார். 11. கிளி வென்றி (கிளியைப்பாடவைத்துப்பூவையை வெற்றிகொள்ளுதலைச் சொல்லியது) - இலநாம் உரைப்பதன்கண் எல்வளை நாணப் பலநாள் பணிபதமும் கூறிச்-சிலநாளுள் பொங்கரி உண்கணாள் பூவைக்கு மாறாகப் பைங்கிளியைக் கற்பித்தாள் பாட்டு. 353 ஒரு சில நாள்களினுள்ளாக, மிக்க அரிபடர்ந்த மையுண்ட கண்ணினளான அவள், பல நாளும் தாழ்ந்த சொற்களை எல்லாம் பயிலக் கூறி, ஒளியுடைய வளையலையுடைய நீநாணும்படியாக, நினது பூவைக்கு எதிராகத் தன் கிளிக்குப் பாட்டுக் கற்பித்தாள்; அதனால், நாம் அக் கிளியிடத்து இகழ்ந்துசொல்லும் சொல் யாதுமில்லை. பூவையுடையாளுக்குச் சொல்லியது இது. مم۔-- 12. பூவை வென்றி (கிளியைப் பூவை வென்றதனைச் சொல்லியது) புரிவொடு நாவினாற் பூவை புணர்த்துப் பெரிய அரியவை பேசும்-தெரிவளை - வெள்ளெயிற்றுச் செவ்வாய் வரியுண்கணாள்வளர்த்த கிள்ளை கிளந்தவை.கீண் டிட்டு. 354