பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் நாகணவாய்ப் புள்ளானது, விருப்பத்தோடே வகுத்துப் பெரியவான சொல்லற்கரிய சொற்களைச் சொல்லும் தெரிந்த வளையினையும், வெள்ளிய பற்களையும், சிவந்த வாயினையும், செவ்வரி கருவரியாற் சிறந்த மையுண்ட கண்ணினையும் உடையாள், தான் வளர்த்த கிளி சொன்ன வார்த்தைகளைக் கிழித்துக் கீழ்ப்படுத்தியே, அது அப்படிச்சொல்லும், 13. குதிரை வென்றி குதிரை ஏற்றத்தில் வெற்றி கொள்ளுதலைச் சொல்லியது) ஐந்து கதியும் பதினெட்டுச்சாரியையும் - கந்து மறமும் கறங்குளைமா - முந்துற - - மேல்கொண்டவைசெலீஇ வென்வேலான் மேம்பட்டான் வேல்கொண்ட பெண்ணாளை மீட்டு. 355 ஐவகைப்பட்ட செலவும், பதினெட்டு வகைப்பட்ட சுற்று வரவும், கழியப்பாய்தலும், கறுவுதலும், ஒலிக்குந்தலையாட்டமும் உடைய குதிரையை முற்பட ஏறிக் கொண்டு, முன்பு சொன்ன அவற்றைச்செலுத்தி,வெற்றி வேலைக்கொண்டு,வெற்றிமகளைத் தன்னிடத்தே மீட்டவனாக, அம்மறவன் மேம்பட்டனன். - 14. தேர் வென்றி (தேரூர்தலிலே வெற்றிகொண்டதனைச் சொல்லியது) ஒலிமணித் திண்தேர் உடையாரை வெல்லும் கலிமணித் திண்தேராற் காளை-கலிமாப் பலவுடன் பூட்டிப் படர்சிறந் தைந்து செலவொடு மண்டிலம் சென்று. 356 இந்த மறவன், ஆரவாரிக்கும் மணிகளையுடைய திண்ணிய தேராலே, மனவெழுச்சியுடைய குதிரைகள் பலவும் ஒருசேரப் பூட்டிச்செலவின்கண் சிறப்புற்று ஐந்து வகையான செலவுடனே, பதினெட்டு வகைச் சாரியையும் சென்று, ஒலிக்கும் மணிகளையுடைய திண்ணிய தேரினரான பகைவரை வெல்வான். ‘மண்டிலம் சென்று' என்றது, இடசாரி வலசாரியாகச் சுழன்று என்றபடியாம். ஐவகைச் செலவு, விக்கிதம், வற்கிதம், உபகண்டம், ஜவம், மாஜவம் ஆகியவை என்பர். . . . . - 15. யாழ் வென்றி (யாழ் இசைத்தலிலே வெற்றி கொள்வதனைச் சொல்லியது) பாலை படுமலை பண்ணி அதன்கூட்டம் கோலஞ்செய் சீறியாழ் கொண்டபின் வேலைச்