பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-ஒழிபு 271 சுவையெலாம் தோன்ற எழீஇயினாள் சூழ்ந்த அவையெலாம் ஆக்கி அணங்கு. 357 - தேவமகளையொத்த இவள், படுமலைப் பாலையையும் அல்லாத பிற பாலைகளையும் ஆக்கி, அழகுசெய்த சிறிய யாழைத் தன் கையிலே கொண்ட பின்பு, முன் சொன்ன திரிபாலைத் திறமெல்லாம் அமுதச் சுவை தோன்ற வாசித்தாள் சூழ்ந்த அவையினுள்ளாரை எல்லாம் தன் வயத்தாராக்கி வெற்றியுட் கொண்டாள். . - - 16. குது வென்றி. (சூதாட்டத்தின்கண் வென்றதைச் சொல்லியது) கழகத்தியலும் கவற்றின் நிலையும் " . அளகத் திருநுதலாள் ஆய்ந்து-புழகத்து பாய வகையாற் பணிதம் பலவென்றாள் - . ஆய வகையும் அறிந்து. 358 குதினது இயல்பினையும், கவற்றினது நிலைமையினையும் பனிச்சையை யுடைய, திருநுதலினாள் ஆராய்ந்து, புகழினை யுடைய மனையிடத்தே, உபாய வகையால் ஆதாயத்தின் கூறுபாட்டையும் அறிந்து, குதுபொர ஒட்டிய பொருள் பலவற்றையும் வென்றாள். - . ஆயம்-ஆதாயம் பணிதம்-ஒட்டும் பொருள். - 17. ஆடல் வென்றி (கூத்தாடு தொழிலில் வென்றதைச் சொல்லியது) கைகால்புருவக்கண் பாணி நடைதூக்குக் கொய்பூங்கொம்பன்னாள் குறிக்கொண்டு-பெய்பூப் படுகளிவண்டார்ப்பப் பயில்வளைநின்றாடும் - தொடுகழல் மன்னன் துடி, 359 கொய்யப் பெற்ற பூங்கொம்பினைப் போன்றவளும், செறிந்த வளையல்களை உடையவளுமான விறலி, தான் சூடிய மலர்மாலையினிடத்தே வண்டுகள் ஆரவாரிக்கக் கட்டும் வீரக் கழலினையுடைய வேந்தனுக்குத் துடிக் கூத்தினைக் கையாலும் காலாலும் புருவத்தாலும் கண்ணாலும் தாளத்தையும் செலவையும் இசையையும் கருதிக்கொண்டுநின்று ஆடாநிற்கும். பாணி தாளம் தூக்கு-இசை . . .