பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 18. பாடல் வென்றி (இசையெடுத்துப் பாடுதலிலே கொண்ட வெற்றியைச் சொல்லியது) . வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள் வெண்டுறையும் செந்துறையும் வேற்றுமையாக்-கண்டறியக் கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையாழ் அந்நரம்பும் அச்சுவையும் ஆய்ந்து. 360 வண்டு தங்கும் கூந்தலையும், மாவடுவின் பிளப்பினை யொத்த கண்ணினையும் உடையாள், கின்னரத்தின் ஒசை போலக் கிளைத் தொடர்ச்சி அமைந்த இனிதான கோவையை யுடைய யாழினது அழகிய நரம்புகளையும் அவ்வவற்றிற்குரிய சுவைகளையும் ஆராய்ந்து, வெண்டுறைப் பாடல்களையும் செந்துறைப் பாடல்களையும் வேறுபாடு தோன்ற, அறிவர் மனத்தாற் கண்டறியும்படியாகப் பாடினாள். 19. பிடி வென்றி (பிடிபோல ஆடுகின்ற கூத்தின்கண் வென்றதனைச் சொல்லியது எனவும், பிடியை நடத்தினதைச் சொல்லியது எனவும் கூறுவர். குவளை நெடுந்தடங்கண் கூரெயிற்றுச் செவ்வாய் அவளொடு மாமையொப்பான - இவளொடு பாணியந் தூக்கு நடையும் பெயராமைப் பேணிப் பெயர்ந்தாள் பிடி. 361 செங்கழுநீர் மலரையொத்த நெடிய பெரிய கண்களையும், கூர்மையான பல்லினையும், சிவந்த வாயினையும் உடைய திருமகளுடனே நிறமொத்தாளான அவளுடனே, தாளமும் இசையும் செலவும் தப்பாதபடி பாதுகாத்து, பிடிபோல அசைந்து பெயர்ந்தாடுங் கூத்தினை இவளும் ஆடினாள். பெயர்த்தாள்' எனப் பாடம் ஒதிப் பிடியை நடத்தினாள் எனவும் உரைப்பர். தொகுத்து உரைத்தல் ஒழிபு என்னும் இப்பகுதியுள், பத்தொன்பது துறைப் பகுதிகள் உரைக்கப்பட்டன. அவை, கொடுப்பவரைப் புகழ்ந்தும் கொடாதவரைப் பழித்தும் பாடுதலாகிய, கொடுப்போர் ஏத்திக் கொடாதோர்ப் பழித்தலும்; வணிகரது தொழில் மேம்பாட்டை உரைத்தலாகிய வாணிக வென்றியும், மற்போர் மறவரது வென்றி