பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಆಲಿಟಿ೨೬೬೬೨-೬– 273 கூறலாகிய மல் வென்றியும், உழவரது தொழில் மேம்பாடு கூறுதலாகிய உழவன் வென்றியும்; • ஏறுகொள்வாரது வென்றியை உரைத்தலாகிய ஏறுகொள் வென்றியும்; கோழிப்போரிடத்து வென்றியை உரைத்தலாகிய கோழி வென்றியும்; ஆட்டுக்கடாப் போரிடத்து வென்றியை உரைத்தலாகிய தகர் வென்றியும்; யானைப் போரிடத்து வென்றியைக் கூறுதலாகிய யானை வென்றியும்; குறும்பூழைப் பொரவிடுத்து வெற்றிகொள்வதனைக் கூறுதலாகிய பூழ்வென்றியும்; சிவல்போரிடத்தே வெற்றியுறுதலைக் கூறுதலாகிய சிவல் வென்றியும்; பூவைக் கிளி வென்றது கூறுதலாகிய கிளி வென்றியும்; கிளியைப் பூவை வென்றது கூறுதலாகிய பூவை வென்றியும்; குதிரையேற்றத்து வெற்றி கூறலாகிய குதிரை வென்றியும்; தேர் செலுத்தலில் பெற்ற வெற்றியைக் கூறுதலாகிய தேர்வென்றியும். யாழிசைத்தலிலே பெற்ற வெற்றியை உரைத்தலாகிய யாழ் வென்றியும்; சூதாட்டத்து வெற்றியை உரைத்தலாகிய சூது வென்றியும், கூத்தாடலில் வென்றது உரைத்தலாகிய ஆடல் வென்றியும்; பாடுதலில் வென்றதனைக் கூறுதலாகிய பாடல் வென்றியும் பிடிபோல ஆடுதலிலே வென்றதனைக் கூறுதலாகிய பிடிவென்றியும் ஆம் + - புறப்பெருவி வெண்பசலையும் புலியூ கேசின் உரையும் முற்றும் பெற்றன.