பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் வெட்சிப்படலம் - 15 - 9. சுரத்து உய்த்தல், அருஞ் சுரத்தும் அகன் கானத்தும் வருந்தாமல் நிரை உய்த்தன்று. கடத்தற்குஅரியவான வழியிடத்தும் அகன்ற காட்டிடத்தும், வருத்தம் உறாதபடியாகப் பேணித், தாம் கைக் கொண்ட நிரைகளை ஒட்டிச் செல்வது, சுரத்து உய்த்தல் ஆகும். சுரத்து உய்த்தல் வழியூடே கொண்டு போதல் . . . . புன்மேய்ந்து அசைஇப்புணர்ந்துடன் செல்கென்னும் வின்மேல் அசைஇயகை வெல்கழலான்-தன்மேற் கடுவரை நீரிற் கடுத்துவரக்கண்டும் நெடுவரை நீழல் நிரை. . 11. வில்லின் மேல் வைத்த கையினையும், வீரக் கழலணிந்த கால்களையும் உடையோனான வெட்சி மறவன், தன்மேலே செங்குத்தான மலையினின்றும் வீழுகின்ற அருவிநீரின் வேகத்துடனே, கரந்தையார்முடுகிவருதலைக்கண்டான் கண்டும், 'இவ் ஆநிரைகள் நெடிய மலைப்பாங்கிடத்தே புன்மேய்ந்தவாக இளைப்பாறித் தம்மில் ஒருங்கே கூடியவாகச் செல்க' என்று, தன் ஏவலாளருக்குக் கட்டளை இட்டனன். . படைமறவன் பேராண்மையினால் மிக்கவன் எனினும், தான் கைப்பற்றிய ஆநிரைகளைப் பேணிக் கொண்டு செல்லும் உள்ளமும் கொண்டவன். இதனால், வெட்சியார் கரந்தையாரை முற்றவும் அழிக்கின்ற கடுமையினர் எனினும், கவர்ந்த நிரைகளை அன்புடன் கொண்டுசெல்பவர் என்பதும் விளங்கும்.அலையலை யாகத் தன்மேல் வருகின்ற கரந்தையினரை எதிர்த்து அழிக்க முனைந்துநின்ற அந்தநிலையினும், அவன் ஆக்கள்பாற் கொண்ட கருணை இதனாற் பெறப்படும். - 10. தலைத்தோற்றம் உர வெய்யோன் இனந்தழிஇ வரவு உணர்ந்து கிளை மகிழ்ந்தன்று. - வலிமையினை விரும்புவோனான படைத்தலைவன், ஆத்திரளைக் கொண்டு வருதலை அறிந்து, அவனுடைய சுற்றத்தவரான பலரும் மகிழ்வது, தலைத்தோற்றம் ஆகும். / / மொய்அணல் ஆனிரை முன்செல்லப் பின்செல்லும் மைஅணற் காளை மகிழ்துடி - கையணல் வைத்த எயிற்றியர் வாட்கண் இடனாட . . . . உய்த்தன்று உவகை ஒருங்கு. - 12