பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் செறிந்த அலைதாடியினை உடைய ஆனிரைகள் முற்பட்டுச் செல்லப், பின்னாக அவற்றைப் பேணிச் செல்வோனான கறுத்த தாடியினையுடைய காளையானவன், மகிழ்வுடன் முழக்கும் துடியொலியானது, தம் கணவரின் பிரிவினாற் கவலையுற்றுத்தம் கையினைக் கன்னத்தே வைத்திருக்கும் வேட்டுவிச்சியரது, வாள்போன்ற கண்கள் இடமாகத் துடிப்ப, உவகையினைப் பலருக்கும் ஒருங்கே செலுத்திற்று! துடியொலி, எயிற்றியரின் இடக்கண் ஆட உவகை ஒருங்கு உய்த்தன்று' என்பதனால், அவரிடத்து இடக்கண் துடித்தலாகிய நன்னிமித்தம் எழத்துடியொலியும் ஒருங்கே எழலாயிற்று எனவும் கொள்ளலாம்.வெட்சி மறவர்தம் ஊரினை அணுகினர் என்னும் துறை இது. இதனைப் பாடி வீட்டுள்ளோர் மகிழ்ந்து உரைத்தற்குக் காரணமான வரவு' எனக்கொண்டு, நுவலுழித் தோற்றம் எனத் தொல்காப்பியப் புறத்திணையியல் கூறும். 11. தந்து நிறை வார் வலந்த துடி விம்ம ஊர் புகல நிரை உய்த்தன்று. வாராலே கட்டின துடியானது ஒலி முழங்கவும், ஊரில் உள்ளார் விருப்புடன் காணவும், வெட்சியார் தாம் கொணர்ந்த நிரையினை ஊர்மன்றத்தே செலுத்துவது தந்து நிறையாகும்.தந்து நிறை கொணர்ந்து நிறுத்துதல். - தண்டா விருப்பினள் தன்னை தலைம்லைந்த வண்டார் கமழ்கண்ணி வாழ்கென்று - கண்டாள் அணிநிரைவாண்முறுவல் அம்மா எயிற்றி மணிநிரைமல்கிய மன்று. 13 அழகிதாக ஒழுங்குபட்டு ஒளிவிடா நின்ற பல்வரிசை யினையும், அழகிய பெருமையினையும் உடையவளான எயிற்றியானவள், தணியாத விருப்பத்தை உடையவளாகத், தன் தலைவனது தலையினிடத்தே சூடின வண்டு நிறைந்த மணங்கமழும் மாலை வாழ்கவென வாழ்த்தியவளாக, மணிகள் பூட்டப்பெற்ற ஆநிரைகள் மிகுதியாக நின்றிருந்த மன்றத்தினைச் சென்று கண்டாள்! 'கண்ணி வாழ்க’ என்றது, வெட்சிச் செயலுக்குக் குறிப்பாக அவன் சூடிய அது, அவனுக்கு வெற்றியைத் தந்ததனால் மகிழ்ந்து, அதனை வாழ்த்தியதாம். அணிநிரை வாண்முறுவல் அம்மா எயிற்றி என்றது, அவளுடைய தண்டாவிருப்பின் தகைமை யினைக் கண்டவர் வியப்பினாற் கூறியது.