பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் புல்லார் நிரைகருதியாஞ்செல்லப் புள்நலம் பல்லார் அறியப் பகர்ந்தார்க்குச் - சொல்லாற் கடஞ்சுட்ட வேண்டா கடுஞ்சுரையான் நான்கு குடஞ்சுட்டினத்தாற் கொடு. பகைவரது ஆநிரையைக் கவர்ந்து வருதலைக் கருதி யாம் போக, அதற்கேற்ற புள் நிமித்தத்தினது நன்மையினைப் பலரும் அறியும்படியாக உணர்ந்து சொன்னவர்களுக்கு, மொழியாற் பெறுதற்குரிய முறைமை இதுவென்று கருதுதல் வேண்டா; ஒன்றொரு குடம்பால் கறக்கும் மிக்க மடியினையுடையவான நான்கு பசுக்களை, இனங்கள் தோறும் ஒவ்வொன்றாகக் கொடுப்பாயாக. கடம் சுட்டல்-மொழியாற்பெறுமுறை இதுவெனச் சுட்டிக் கூறுதல்,கடுஞ்சுரை-பெரிதானமடி, இனத்தால் என்றது.காரான், சேதான் என வகைக்கு ஒன்று என்பதற்கு குடஞ்சுட்டு ஆன்குடப்பால் சுரந்து தரும் பசு 17. துடி நிலை தொடுகழன் மறவர் தொல்குடிமரபிற் படுகழன் இமிழ்துடிப் பண்புரைத் தன்று. கட்டிய வீரக் கழலினை உடையோரான மறவர்கள், பழங்குடி முறைமையினாலே மிக்க கண்ணினை உடையதாய் முழங்குகின்ற, துடியினை முழக்குமவனின் குணத்தைப் பாராட்டி உரைப்பது, துடிநிலை ஆகும். - 'தொடுகழன் மறவர்’ என மறவரது வீரச்செறிவையும், தொல்குடி மரபிற் படுகண் இமிழ் துடி எனத் துடியினது வழிவழியாக வருகின்ற இசைத்துறை நலத்தையும் குறித்தனர். தொல்குடி'யினை மறவரொடும் சேர்த்துத் தொடுகழன் மறவன் தொல்குடி எனவும் உரைப்பர். படைநடத்தற்குத் துடியொலியின் தகைமை கிளர்ச்சியும் செம்மையும் தருவதாதலின். அதனைத் தொல்குடிமரபினின்றும் வழுவாது முழக்கியதுடியனைப் போர் வெற்றிக்குக் காரணமாயவருள் ஒருவனாகக் கருதிப் பாராட்டிச், சிறப்புச் செய்வது இது. முந்தை முதல்வர் துடியர் இவன்முதல்வர் எந்தைக்குத் தந்தை யிவனெனக்கு - வந்த குடியொடு கோடா மரபினாற் கின்னும் வடியுறு தீந்தேறல் வாக்கு. 19 என்னுடைய முற்பட்ட மூதாதையருக்கு இவனுடைய மூதாதையர் துடிகொட்டுவோராயிருந்தனர்; என் தந்தைக்கு இவன் தந்தையும், 18 &